ஆடுகளத்திற்கு ஏற்ப ஆடினேன்: கீமோ பால்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 39 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி வெற்றிபெற்றது.

2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 30-ஆவது லீக் ஆட்டம் ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், தில்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்ஸன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சன்ரைஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர், ஜானி பைர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், விஜய் ஷங்கர், ரிக்கி புய், தீபக் ஹூடா, ரஷீத் கான், அபிஷேக் சர்மா, புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா, கே காலேல் அகமது

டெல்லி கேப்டன்ஸ்: பிருத்வி ஷா, ஷிகார் தவான், கொலின் முர்ரோ, ஷ்ரியாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷாப் பன்ட் (கீப்பர்), கிறிஸ் மோரிஸ், ஆக்ஸார் படேல், அமித் மிஸ்ரா, கீமோ பால், ககிஸோ ரபாடா, இஷாந்த் சர்மா

இதையடுத்து களமிறங்கிய தில்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 45, காலின் முன்ரோ 40 ரன்கள் சேர்த்தனர்.  சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர், பேரிஸ்டோவ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பேரிஸ்டோவ் 41, வார்னர் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்ததும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி சரிவை சந்தித்தது.

பின்னர் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 18.5 ஓவர்களில் 116 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டையும் இழுந்து தோல்வியை தழுவியது. இதையடுத்து தில்லி கேபிடல்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சிறப்பாக பந்துவீசிய காசிசோ ரபாடா 4, கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகள் எடுத்து தில்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு உதவினர்.

Sathish Kumar:

This website uses cookies.