“இந்திய வீரர்களிடம் கற்றுக்கொண்டேன்; அதை வைத்து அவர்களையே சம்பவம் செய்வேன்” இங்கிலாந்து வீரர் ஆக்ரோஷம்!

“இந்திய வீரர்களிடம் கற்றுக்கொண்டேன்; அதை வைத்து அவர்களையே சம்பவம் செய்வேன்” இங்கிலாந்து வீரர் ஆக்ரோஷம்!

இந்திய சுழல்பந்து வீச்சாளர்களிடம் கற்றுக்கொண்டதை அவர்களிடமே செயல்படுத்த இருக்கிறேன் என ஆக்ரோசமாக பேசியுள்ளார் இங்கிலாந்து அணியின் சுழல்பந்து வீச்சாளர் ஜாக் லீச்.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதி வரும் டெஸ்ட் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 4ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சின் ஜோடியான அக்சர் மற்றும் அஸ்வின் இருவரின் சூழலில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் திணறியதோடு மட்டுமல்லாமல் விக்கெட்டுகளையும் இழந்து, இந்த போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.

அதே நேரம் இங்கிலாந்து அணியின் சுழல்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தினாலும் ரன்களை விட்டுக் கொடுத்தனர். இதனால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற முடிந்தது. இந்நிலையில் நான்காவது போட்டிக்கு முன்னதாக அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் இருவரிடமும் சில பயிற்சிகளை மேற்கொண்டதாக ஜாக் லீச் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

ஜாக் லீச் கூறுகையில், “மைதானத்தின் போக்கு தற்போது தெரியவந்திருக்கிறது. முந்தைய ஆட்டத்தில் அக்சர் மற்றும் அஸ்வின் இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களிடம் சில அனுபவங்களை கற்றுக் கொண்டேன். அதற்காக அவர்களை போலவே பந்துவீச்சு இருக்கும் என்று கிடையாது. அவர்களிடம் கிடைத்த அனுபவத்தை வைத்து எனது பாணியில் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்த முற்படுகிறேன்.

முந்தைய போட்டியில் இரண்டு நாட்களில் தாக்குபிடிக்க முடியாமல் தோல்வியை தழுவியது வேதனை அளித்தாலும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நான்காவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட காத்திருக்கிறோம்.” என நம்பிக்கை அளிக்கும் விதமாக பேட்டியளித்தார்.

இங்கிலாந்து அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்திய 4 வது போட்டியில் வெல்ல வேண்டும் அல்லது டிரா செய்தாலே இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி துரதிஷ்ட வசமாக தோல்வியுற்றால், இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி சென்றுவிடும்.

 

Prabhu Soundar:

This website uses cookies.