இந்நியாவில் தற்போது 14வது ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடர் இதுவரை இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளது.
முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூர் அணி மோதியதில் பெங்களூர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியதில் டெல்லி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.
இன்று சென்னையில் நடைபெற்று வரும் மூன்றாவது போட்டியில் சன்ரைஸர்ஸ ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இடம்பெற்று இருக்கிறார். இவர் தற்போது நடைபெற்று முடிந்த இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி சிறிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். தனது முதல் போட்டியிலயே 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
இதைத்தொடர்ந்து தற்போது கொல்கத்தா அணி லெவனில் இடம்பெற்று இருக்கிறார். இவர் 2018 ம் ஆண்டு நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டார். இதில் தனது திறையை நிருபித்து அணியில் இடம்பிடித்து 7 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்பின் 2020 சீசனில் 6 போட்டிகளில் 4 விக்கெட்கள் மட்டும் வீழ்த்தினார். தற்போது கொல்கத்தா அணி இந்த சீசனில் நம்பிக்கை வைத்து அணியில் மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்கிறது.
இந்நிலையில், இங்கிலாந்து தெடரில் நான் விராட் கோலியிடமிருந்து பலற்றை கற்றுக்கொண்டேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “நான் இங்கிலாந்து தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமான போது கொஞ்ச அழுத்தமான நிலைமை இருந்தது.
அப்போது விராட் கோலி மற்றும் மற்ற சீனியர் வீரர்கள் அனைவரும் என்னை எப்போதும் ஃப்ரண்ட் பூட்டில் இருக்கும்படி கூறினார்கள். அது நன்றாக வேலை செய்தது. அப்போது நாங்கள் மீண்டும் வந்து போட்டியை வென்றோம். இது தான் கற்றுக்கொண்ட பாடம்” என்று பிரசித் கிருஷ்ணா கூறியிருக்கிறார்.