இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது. இதில் ரசித் கான் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட்போட்டிக்கான 16 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு அறிவித்தது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சமீபத்தில் சர்வதேச கிரிக்க்ட் கவுண்சில் (ஐசிசி.,) டெஸ்ட் அந்தஸ்து அளித்தது. இதையடுத்து தனது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் பயனத்தை கிரிக்கெட் வல்லரசான இந்தியாவுக்கு எதிராக துவங்க ஆப்கானிஸ்தான் முடிவு செய்தது.
இந்த போட்டி அடுத்த வாரம் துவங்க உள்ள நிலையில் சுழற்பந்து வீச்சாளர் ரசித் கான்,
இந்த டெச் போட்டியில் தான் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பேசியுள்ளார்.
இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ.,) பச்சைக்கொடி காட்டியது. இதையடுத்து இரு அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் வரும் ஜூன் 14ல் நடக்கவுள்ளது. இதில் கேப்டன் கோலி, சகா உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.
ஆப்கானிஸ்தான் அணி விவரம்: அஸ்கர் ஸ்டானிஸ்ஜாய் (கேப்டன்), முகமது ஷாஜத், ஜவாத் அஹமதி, இன்ஷானுல்லா ஜனாத், ரஹ்மத் ஷா, ரசிர் ஜமால், ஹஸ்மத்துள்ளா ஷாகிதி, அப்ஷர் ஜஜாய், முஹமது நபி, ரசித் கான், ஜாகிர் கான், ஹம்ஷா ஹோதக், சையது அஹமது ஷேர்ஷாத், யாமின் அஹமத்ஷாய், வாப்தர் மொமத், முஜீப் ரஹ்மான்.
வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் இடையே மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் ஆட்டம் நேற்று நடந்தது.
முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய வங்காள தேசம் 19 ஓவர்களில் 122 ரன்னில் சுருண்டது. இதனால் ஆப்கானிஸ்தான் 45 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் ரஷீத்கான் 13 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
ரஷீத்கான் 20 ஓவர் போட்டியில் 50 விக்கெட்டை கைப்பற்றினார். முதல் விக்கெட்டை எடுத்த போது அவர் 50-வது விக்கெட்டை தொட்டார். 31 போட்டியில் அவர் 52 விக்கெட் எடுத்து உள்ளார்.
இதன் மூலம் 20 ஓவர் போட்டியில் குறைந்த ஆட்டத்தில் 50 விக்கெட் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற சாதனையை இம்ரான்தாகீருடன் (தென் ஆப்பிரிக்கா) இணைந்து பெற்றார்.
அஜந்தா மெண்டீஸ் (இலங்கை) 26 ஆட்டத்தில் 50 விக்கெட் கைப்பற்றியதே சாதனையாக இருக்கிறது.