இன்னும் இரண்டு மாதங்களில் நான் திரும்பி விடுவேன் ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம்
பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுபவர். இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் பொழுது தனது விரலை உடைத்துக் கொண்டார். இதனை எடுத்து அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக உடனடியாக இங்கிலாந்துக்குச் சென்று விட்டார். இதனால் அவரால் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் அவ்வளவாக விளையாட முடியாமல் போனது.
தற்பொழுது அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் ஓய்வு பெற்றுக் கொண்டிருக்கும் பென் ஸ்டோக்ஸ், இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நான் பழையபடி விளையாட தொடங்குவேன். ஆனால் என்னால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாது என்று கூறியுள்ளார்
வெளிநாட்டு தொடர்களை விளையாட இருக்கும் இங்கிலாந்து அணி
தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை மீண்டும் செப்டம்பர் மாதத்தில் வைத்து நடத்துவதற்கு பிசிசிஐ செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆனால் அந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவர் கூறியுள்ளார். ஏற்கனவே பல தொடர்களை நாங்கள் ஒப்பந்த படுத்தி விட்டோம்.
அதன்படி இங்கிலாந்து வீரர்களுக்கு ஐபிஎல் தொடர் மறுபடியும் விளையாடுவதற்கு கால அவகாசம் கிடைக்கப் போவதில்லை. அவர்கள் அனைவரும் இங்கிலாந்து அணிக்காக பல தொடர்களில் விளையாட போகிறார்கள். எனவே இது நான் முன்கூட்டியே கூறி விடுகிறேன் என்று இங்கிலாந்து கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஆஷ்லி கூறிவிட்டார்.
இந்திய மக்களுக்கு தன்னுடைய நன்றியையும், நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளையும் கூறிய் பென் ஸ்டோக்ஸ்
தொடர் நடைபெற்ற முதல் போட்டியிலேயே இப்படி நடைபெறும் என்று நான் நினைக்கவில்லை. இதன் காரணமாக என்னால் அந்த ஒரு போட்டியை தவிர இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போனது. இன்னும் இரண்டு மாதங்களில் நான் பழையபடி விளையாட தொடங்குவேன் எனினும் இங்கிலாந்து அணிக்காக பல தொடர்களில் பங்கேற்க உள்ளதால் ஐபிஎல் தொடர் மறுபடியும் நடந்தால் என்னால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட முடியாது.
என்னை நன்றாக வரவேற்று உபசரித்த இந்திய ரசிகர்களுக்கும் கமிட்டீ மெம்பர்களுக்கும் நன்றி என்று கூறியுள்ளார். மேலும் தற்பொழுது இந்தியா கவலைக்கிடமான நிலையில் உள்ளது. இந்தியாவில் தற்பொழுது கொரோனோ எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது என்பதை நான் அறிவேன். நிச்சயமாக இந்தியாவில் சூழ்நிலை மாறி அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன். உங்கள் அனைவருக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன் நீங்கள் அனைவரும் மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்பி வீரர்கள் என்றும் அடுத்த ஆண்டு உங்களை சந்திப்பதில் மிக ஆவலாக உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.