இலங்கை அணிக்கெதிராக நான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்: ரோஹித் சர்மா ஓப்பன் டாக்

இலங்கைக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இரட்டைச் சதமெடுக்கும் வாய்ப்பைத் தவற விட்டுவிட்டேன் எனக் கூறியுள்ளார் ரோஹித் சர்மா.

டிசம்பர் 2017-ல் இலங்கைக்கு எதிரான டி20 ஆட்டத்தில் 35 பந்துகளில் சதமடித்து சாதனை செய்தார் ரோஹித் சர்மா. பிறகு 13-வது ஓவரில் 43 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இன்ஸ்டகிராம் உரையாடலில் இந்த ஆட்டம் பற்றி ரோஹித் சர்மா கூறியதாவது:

அன்றைய தினம் இரட்டைச் சதமெடுக்கும் வாய்ப்பும் இருந்தது. அதைத் தவற விட்டுவிட்டேன். நான் ஆட்டமிழந்தபோது 9 ஓவர்கள் (7 ஓவர்கள்) மீதமிருந்தன. எனவே இரட்டைச் சதமெடுக்கும் வாய்ப்பு இருந்தது. பரவாயில்லை, 35 பந்துகளில் சதமடித்ததில் மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார்.

உள் அரங்கில் கிரிக்கெட் விளையாட போதுமான இடம் இருந்தால் நன்றாக இருக்கும் என ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் வீரர்கள் தங்கள் இல்லங்களில் ஓய்வெடுத்துக் கொண்டு உள்ளார்கள்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரோஹித் சர்மா கூறியதாவது:

உள் அரங்கில் கிரிக்கெட் விளையாட போதுமான இடம் இருந்தால் நன்றாக இருக்கும் என விரும்புகிறேன். ஆனால் மும்பையில் இடங்கள் எல்லாம் நெரிசலாக உள்ளன. எனவே உங்கள் அபார்ட்மெண்டை விட்டு வெளியேற முடியாது.

மும்பையில் உங்களுக்கென விளையாட்டுப் பகுதிகளை உள்ளடக்கிய சொந்த வீடு வாங்குவது அவ்வளவு எளிதல்ல. இங்கு எல்லாம் விலை அதிகம். நான் அபார்ட்மெண்டில் வசிக்கிறேன். நல்லவேளையாக அதில் பால்கனி உண்டு. என் பயிற்சியாளர் சொன்னபடி அந்த இடத்தில் உடற்பயிற்சி செய்து வருகிறேன். உடற்பயிற்சிக்கூடங்களை விரைவில் திறப்பார்கள். அப்போது அங்குச் சென்று பயிற்சி எடுப்பேன்.

என்னுடைய பேட்டிங் பயிற்சியை, ஆட்டத்தை மிஸ் செய்கிறேன். அதிரடியாக பேட்டிங் செய்யும் நாளை எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 37,300 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Sathish Kumar:

This website uses cookies.