டி20 கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கிய வீரராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் டாம் பென்டன். 2020 ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக தேர்வாகினர், இருந்தபோதும் அவருக்கு சரியான வாய்ப்பு அளிக்கவில்லை. இரண்டு போட்டிகளில் பங்கேற்று 18 ரன்களை மட்டுமே எடுத்தார்.
2008ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் தற்போது வரை 13 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதில் மும்பை அணி 5 முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும் கோப்பையை வென்றுள்ளது. 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் 14வது ஐபிஎல் சீசன் மே மாதம் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இந்த 14வது ஐபிஎல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் டாம் பென்டன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, ”ஐபிஎல் போட்டியில் பங்கு பெறுவதன் மூலம் தனது திறமையை வளர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன், ஆனால் எனக்கு இங்கு சரியான வாய்ப்புகள் ஏதும் வழங்கவில்லை. எனக்கு பெஞ்சில் உட்கார்ந்து நேரம் கழிப்பதை விட கிரிக்கெட் விளையாடுவது மிகவும் பிடிக்கும் இதனால் நான் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது நான் இங்கிலீஷ் கண்ட்ரி கிரிக்கெட் டில் விளையாட உள்ளேன்அங்கு எனக்கு விளையாட சரியான வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி வீரரான டாம் கூறியதாவது இன்னும் நான் இதைப்பற்றி சரியான முடிவு எடுக்கவில்லை, ஆனால் இதைப் பற்றி யோசித்துக்கொண்டு உள்ளேன் கூடிய விரைவில் நான் இதைப் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.