என்னுடைய 16 வயதில் மகேந்திர சிங் பந்து வீசி இருக்கிறேன் ; உண்மையை உடைத்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்

தோனிக்கு

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வேக பந்து வீச்சாளரான நோர்க்கியா அதி வேகமாக பந்து வீச கூடிய ஒரு பந்து வீச்சாளர். அவர் வீசும் பந்துகள் சாதாரணமாகவே 140 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பறக்கும். கடந்த ஆண்டு அவர் டெல்லி அணிக்கு மிக சிறப்பாக விளையாடியது நம் அனைவருக்கும் தெரியும்.

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் போல டெல்லி அணிக்காக சிறப்பாக விளையாடி 22 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டெல்லி அணி கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறி வரும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தன்னுடைய 16வது வயதில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூட்டி தற்பொழுது அந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

என்னுடைய பந்துகளை மகேந்திர சிங் தோனி அடிப்பார் என்று நான் நினைக்கவில்லை

என்னுடைய 16வது வயதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நான் நெட் பலராக தேர்வாகி இருந்தேன். 2010-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் தென் ஆப்பிரிக்காவின் வாரியர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. அந்த சமயத்தில் சென்னை அணிக்கு நான் வலைப்பயிற்சியில் பந்துகளை வீசி வந்தேன்.

அப்போது எப்பொழுதும் போல நான் பந்துவீசி கொண்டிருக்கும் வேளையில், நான் பந்துவீசிய பேட்ஸ்மேன் சரியாக விளையாடமாட்டார் என்று நினைத்து அவருக்கு பந்துகளை வீசினேன். ஆனால் நான் வீசிய அனைத்து பந்துகளையும் அவர் சர்வசாதாரணமாக, சிறிதும் தனது இடத்தை விட்டு நகராமல் தூக்கி அடித்தார்

பின்பு தான் நான் கவனித்தேன் நான் வீசியது மகேந்திர சிங் தோனிக்கு என்று. மகேந்திர சிங் தோனிக்கு தான் நான் இவ்வளவு நேரம் பந்து வீசி இருக்கிறேன் என்று அப்பொழுது தான் நான் எனக்கு தெரிய வந்தது இன்றைய தனது பழைய நினைவை நோர்க்கியா கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்

2010ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் சென்னை அணி வாரியர்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல 2014ஆம் ஆண்டு நடந்த கடைசி சாம்பியன்ஸ் லீக் தொடரில் சென்னை அணி கொல்கத்தா அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

சென்னை அணியின் பரம்பரை எதிரியான மும்பை அணியும் 2011ம் ஆண்டு பெங்களூர் அணியை 31 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த ஆண்டு தொடரை வென்றது.அதேபோல் 2013ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த ஆண்டிற்கான தொடரை வென்றது.

ஏழு ஆண்டுகள் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரில் இரண்டு முறை சென்னை அணியும், இரண்டு முறை மும்பை அணியும் வெற்றி பெற்று சரி சமமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.