“அஸ்வினுக்கு நேர்ந்த அவமானம்” அஸ்வின் இந்திய அணியில் இப்படித்தான் நடத்தப்படுகிறார்! – புட்டுப்புட்டு வைத்த கவாஸ்கர்!

“இந்திய அணியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நடத்தப்படுகிறார்கள். குறிப்பாக அஸ்வின் இப்படித்தான் நடத்தப்படுகிறார்.” என்று மிகப்பெரிய குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி ஆஸ்திரேலிய இடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தொடர்ந்து இரண்டாவது முறையாக நழுவவிட்டது. இந்த போட்டியில் ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்ததில் துவங்கி, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற பவுலரை எடுக்காதது வரை பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், தரவரிசையில் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் மற்றும் நம்பர் 2 ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியில் அமர்த்தப்பட்டது குறித்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரையும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

“பல வருடங்களாகவே இந்திய அணியில் அஸ்வின் இப்படித்தான் நடத்தப்பட்டு வருகிறார். அவரது பந்துவீச்சை திறமைக்காக இல்லை. ஆனால் மனதில் பட்டதை நேரடியாக டீம் மீட்டிங்கில் பேசும் காரணத்திற்காக இப்படி நடத்தப்படுகிறார். இந்திய அணியில் மற்ற வீரர்கள் பிடிக்கவில்லை என்றாலும் அதை மனதில் வைத்துக் கொண்டு அமைதியாக இருந்து விடுகின்றனர். ஆனால் அஸ்வின் பயிற்சியாளர் அல்லது கேப்டன் என பார்க்காமல் வெளிப்படையாக பேசி விடுகிறார். இதற்காகவே பல போட்டிகளில் வெளியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்.

அதேபோல் பல போட்டிகளில் தொடர்ந்து அஸ்வின் பல விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும், ஒரு போட்டியில் எடுக்காமல் விட்டுவிட்டால் அடுத்த போட்டியில் வெளியில் அமர்த்தப்படும் அளவிற்கு மோசமாக நடத்தப்பட்டு இருக்கிறார். இந்திய கிரிக்கெட்டில் எழுதப்படாத ஒரு விதி இருக்கிறது. ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறையை அணி நிர்வாகிகள் கடைபிடிக்கின்றனர். என்னிடம் கேட்க வேண்டாம் அஸ்வின், நடராஜன் போன்ற வீரர்களை நீங்களே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இது ஒரு பக்கம் என்றால், பிட்ச்சில் இந்த பவுலர் சரி வருவார், அந்த பவுலர் சரிவர மாட்டார் என்பதற்கு ஏற்பவும் எடுக்கின்றனர். அதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால் நம்பர் ஒன் பவுலராக இருப்பவரை எப்படி வெளியில் அமர்த்த முடியும். கடந்த முறை இங்கிலாந்தில் பைனலில் விளையாடியபோது அஸ்வின் நன்றாகவே பந்துவீசியது நினைவு இருக்கட்டும்.

பவுலர்களுக்கு மட்டுமே இப்படிப்பட்ட ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. பேட்ஸ்மேன்கள் ஸ்பின், வேகப்பந்துவீச்சு என எதில் பிரச்சனை இருந்தாலும் வெளியில் அமர்த்தப்படுவதில்லையே ஏன்?.” என்றும் காரசாரமாக கேள்விகளை முன்வைத்தார் கவாஸ்கர்.

Mohamed:

This website uses cookies.