இவர் பவுலிங்க நெனச்சாலே..இப்போவாரைக்கும் பதறுது – மனம்திறந்த யுவராஜ் சிங்! யுவராஜ் நடுங்கிய பவுலர் இவர்தானாம்

இவர் பவுலிங்க நெனச்சாலே..இப்போவாரைக்கும் பதறுது – மனம்திறந்த யுவராஜ் சிங்! யுவராஜ் நடுங்கிய பவுலர் இவர்தானாம்

என் கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் இவரது பந்துவீச்சு கண்டு திணறியிருக்கிறேன் என மனம்திறந்து பேசியுள்ளார் யுவராஜ் சிங்.

2000ம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமான யுவராஜ்சிங், தனது சிறப்பான ஆல்ரவுண்டர் செயல்பட்டால் முன்னணி வீரராக அணியில் உருவெடுத்தார். பின்னர் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, தோனி, கோலி ஆகியோரின் கேப்டன் பொறுப்பிலும் ஆடியிருக்கிறார்.

இவரது குறிப்பிடத்தக்க செய்லபாடாக 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில், தொடர் நாயகன் விருது மற்றும் 2011ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை தட்டி சென்றுள்ளார். சிறந்த ஆல்ரவுண்டராகவும் நட்சத்திர வீராகவும் வலம்வந்த யுவராஜ் சிங், 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் இந்திய அணியில் ஆடவில்லை.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சுமார் 17 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடியுள்ளார் யுவராஜ் சிங். 2007 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக பிராட் ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசியது ரசிகர்களால் இன்றளவும் மறக்க இயலாத ஒன்று.

இந்நிலையில், தனது இத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த ஒரு பவுலரை நான் எதிர்கொள்ள மிகவும் திணறியுள்ளேன் என மனம் திறந்து பேசியுள்ளார் யுவராஜ் சிங்.

அவர் கூறுகையில்: “இலங்கை அணியின் முன்னாள் சுழல்பந்துவீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் பவுலிங்கை எதிர்கொள்கையில் நான் அதிகமாக திணறியிருக்கிறேன். அவரது பவுலிங்கை எப்படி எதிர்கொள்வது என்ற ஐடியாவே எனக்கு இருந்ததில்லை கடைசிவரை. டெக்னிக் இல்லாமல் நிதானமாக ஆடி இந்த ஓவரை கடத்திவிட வேண்டும் என்று மட்டுமே எண்ணினேன்.

அதேபோல், ஆஸ்திரேலிய முன்னாள் பந்துவீச்சாளர் க்ளென் மெக்ராத். அவரது அவுட் ஸ்விங் பந்து எதிகொள்வதற்கு கடினமாக இருக்கும். ஆனால் அதிஷ்டவசமாக மெக்ராத்தின் பவுலிங்கை நான் அதிகம் எதிர்கொண்டதில்லை. நான் டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக ஆடியதில்லை என்பதால் மெக்ராத்தின் பவுலிங்கை நான் அதிகமாக எதிர்கொண்டதில்லை.” என்று தெரிவித்தார்.

Prabhu Soundar:

This website uses cookies.