இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களில் சஹால் இந்திய அணியில் விளையாட வைக்கப்படவில்லை. அவர் சற்று சுமாராக விளையாடி வந்த காரணத்தினால் அவருக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது. அதற்கு ஏற்ப அதற்கு பின்னர் நடந்த ஐபிஎல் ஆட்டங்களில் 7 போட்டிகளில் விளையாடி வெறும் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஏமாற்றம் அளித்தார்.
இருப்பினும் அவருக்கு இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான தொடர் ஆரம்பிக்க படுப்பதற்கு முன்பாக நிச்சயமாக என்னுடைய நல்ல பங்களிப்பை இந்த தொடரில் வழங்குவேன் என்று சஹால் முன்பே கூறியிருந்தார். அவர் கூறியதைப் போலவே நடந்து முடிந்த ஒரு நாள் ஆட்டத்தில் இரண்டு போட்டிகளில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த முதல் டி-20 ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்.
தன்னுடைய இந்த சிறப்பான ஆட்டத்திற்கு என்ன காரணம் என்பதை தற்போது சஹால் இந்திய ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
பயிற்சியாளர்கள் மற்றும் ஜெயந்த் யாதவ்
எனக்கு செய்த உதவி
என்னுடைய பந்துவீச்சை மேம்படுத்த என்னுடைய பயிற்சியாளர்கள் உதவினார்கள். பரத் அருள் மற்றும் பரஸ் ஹாம்பிரே எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கினார்கள். அதேபோல என்னுடைய சிறுவயது நண்பர் ஜெயந்த் யாதவ் நிறைய டெக்னிக்கல் விஷயத்தை எனக்கு விளக்கினார். நாங்கள் இருவரும் இணைந்தே நிறைய விஷயங்கள் பேசுவோம். இந்த லாக்டவுன் நேரத்தில் நான் எனது பந்துவீச்சை மேம்படுத்த இவர்களது உதவியை நாடினேன் அது எனக்கு தற்பொழுது கை கொடுத்துள்ளது என்று மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.
போட்டியில் சிறப்பாக பங்களிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஒரே நோக்கம்
தற்போது இந்திய அணியில் ராகுல் சஹர் மற்றும் வருன் சக்கரவர்த்தி என அடுத்தடுத்து திறமையான இளம் பந்துவீச்சாளர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் நன்றாக பங்களிக்கும் நிலையில் பல சீனியர் வீரர்களுக்கு அது நல்ல செய்தியாக படாது. அதற்கு சஹால் விதி விலக்கல்ல.
எனவே இந்த போட்டியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நான் எப்பொழுதும் விளையாடும் நிலையில் என்னுடைய ஆட்டத்தை நன்றாக வெளிப்படுத்த வேண்டும் என்பதை மட்டுமே என் மனதில் நினைத்துக் கொள்வேன். என்னைப் பொறுத்தவரையில் எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அணிக்கு என்னுடைய முழு பங்களிப்பை வழங்க வேண்டும். கூடுதலாக இந்த போட்டி மற்றும் வாய்ப்பு குறித்த சிந்தனை எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை இணையும் இருக்காது என்றும் இறுதியாக சஹால் கூறி முடித்தார்.