முன்னாடி விராட் கோலி, ரோஹித் சர்மானு பேசினீங்க, ஆனா இப்ப நிலைமை வேற மாதிரி மாறிடுச்சு; இந்தியாவை வம்பிழுத்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் !!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களான முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகிய இரு வீரர்களை இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

தற்போது நடந்து முடிந்த 3 டி20 தொடர்களைக் கொண்ட பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 3-0 என வீழ்த்தி தொடரை வெற்றி பெற்றது.

குறிப்பாக இந்தத் தொடரில் 208 ரன்கள் அடித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கடினமான இலக்கை பாகிஸ்தான் அணி சேஸ்செய்து வெற்றி பெற்று சாதனை படைத்தது, மேலும் அந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான முஹம்மது ரிஸ்வான் (83) மற்றும் பாபர் அசாம்(79) ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து 158 ரன்கள் அடித்து அசத்தினார். இதனால் டி20 தொடரில் 150+ பார்ட்னர்ஷிப் அமைத்த நான்காவது ஜோடிகள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

தனது அபாரமான பேட்டிங் திறமையின் மூலம் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவரும் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பாராட்டு மழையில் நனைந்து வருகின்றனர், இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷிட் லதீப் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர்,” சில வருடங்களுக்கு முன்பு குறிப்பாக டி20 தொடரில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் பாகிஸ்தான் அணியில் இல்லை என்று பேசி வந்தனர். ஆனால் தற்பொழுது இந்திய அணியில் இருக்கக்கூடிய சிலர் பாகிஸ்தான் அணியில் இருக்கும் ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகிய இரு வீரர்களை போன்று இந்திய அணியில் இல்லை என்று பேசி வருகின்றனர்” என்று பேசியுள்ளார்.

Mohamed:

This website uses cookies.