தோனி எப்போது மீண்டும் இந்திய அணிக்காக ஆடுவார்? புதிய செய்தியை சொன்ன ஆசிஸ் நெஹரா!

தோனி எப்போது மீண்டும் இந்திய அணிக்காக ஆடுவார் புதிய செய்தியை சொன்ன ஆசிஸ் நெஹரா

இந்திய அணிக்காக தோனி விளையாடி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது அவரை மீண்டும் இந்திய அணியின் உடையில் பார்த்து விட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தவியாய் தவித்து வருகிறார்கள் இது ஒரு தோணி தற்போது வரை வழக்கம்போல் வாயை திறக்காமல் இருந்து வருகிறார்.

இதுகுறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

New Delhi: India’s Ashish Nehra greets by Virat Kohli and Mahendra Singh Dhoni after his retirement from all forms of cricket during the first T20 match against New Zealand at Feroz Shah Kotla Stadium in New Delhi, on Wednesday. PTI Photo by Manvender Vashist (PTI11_1_2017_000235B)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ நிகழ்ச்சியில் கூறியதாவது:-

எனக்கு தெரிந்தவரை டோனி இந்திய அணிக்காக தனது கடைசி போட்டியை மகிழ்ச்சியுடன் விளையாடி முடித்து விட்டார் என்றே நினைக்கிறேன். டோனி இனி நிரூபிப்பதற்கு எதுவும் இல்லை. ஓய்வு குறித்து அவர் இன்னும் வெளிப்படையாக அறிவிக்காததால் அதை பற்றி நாமும், ஊடகத்தினரும் பேசிக் கொண்டு இருக்கிறோம். மனதில் என்ன உள்ளது என்பதை அவர் தான் அறிவிக்க வேண்டும். வரும் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே டோனிக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்கும் என்ற கருத்தை நான் நம்பவில்லை.

ஏனெனில் ஐ.பி.எல். போட்டியில் அவர் ஆடுவதற்கும், சர்வதேச போட்டிக்கான அணியில் இடம் பிடிப்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. என்னை பொறுத்தவரை டோனியின் ஆட்டத்திறன் ஒரு போதும் குறையாது. டோனி விளையாட விரும்பினால், கேப்டனோ, பயிற்சியாளரோ, தேர்வாளரோ யாராக இருந்தாலும் டோனியை முதல் ஆளாக அணியில் சேர்ப்பார்கள்.

இவ்வாறு நெஹரா கூறினார்.

39 வயதான டோனி கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு எந்த போட்டியிலும் ஆடாத டோனி தற்போது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கால்பதிக்க ஆயத்தமாகி வருகிறார்.

Mohamed:

This website uses cookies.