ரோகித் சர்மாவின் பாரத்தை குறைப்பேன்: யுவ்ராஜ் சிங்!

மும்பை இந்தியன்ஸ் அணிகள் தேர்வாகியுள்ள என்னால் அந்த அணியின் கேப்டனாக உள்ள ரோகித் சர்மாவின் பாரத்தை குறைக்க முடியும் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார். மேலும்,

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள அணியில் யார்? யார்? எல்லாம் இடம்பெற வேண்டும் என்பது குறித்து கருத்துக்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக தோனி உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவது குறித்து கடந்த ஒன்றரை வருடங்களாகவே விவாதங்கள் எழுந்து வருகின்றனர். சில நேரங்கள் அவர் ஓய்வு பெற வேண்டும் என்றும் அளவிற்கு சென்றது.

LONDON, ENGLAND – JUNE 08: Yuvraj Singh of India in action during the ICC Champions Trophy Group B match between India and Sri Lanka at The Kia Oval on June 8, 2017 in London, England. (Photo by Christopher Lee-IDI/IDI via Getty Images)

ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தொடர்ச்சியாக மூன்று அரைசதங்கள் அடித்து தோனி தன்னை மீண்டும் நிருபித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய இரண்டாவது டி20 போட்டியின் போதும், தோனிக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் பலரும் பதாகைகளை ஏந்தியவாரும் இருந்தனர். அதில், தோனி ஓய்வு பெறக் கூடாது என்று சில ரசிகர்கள் தங்கள் பதாகையில் எழுதி இருந்தனர்.

இந்நிலையில், உலகக் கோப்பைக்கான அணியில் தோனி இடம்பெறுவது குறித்து யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யுவராஜ் சிங், “தோனிக்கு சிறந்த கிரிக்கெட் அறிவு உள்ளது. ஒரு விக்கெட் கீப்பராக போட்டியை கண்காணிக்க அது சிறந்த இடம். அந்தப் பணியை பல வருடங்களாக அவர் சிறப்பாக செய்து வருகிறார். அவர் ஒரு சிறந்த கேப்டனாக இருந்திருக்கிறார். இளம் வீரர்களை மட்டுமல்லாமல் விராட் கோலியையும் அனைத்து தருணங்களிலும் வழிகாட்டி வருகிறார்.

அதனால், முடிவு எடுக்கும் பணிகளுக்காகவே தோனி உலகக் கோப்பை அணியில் நிச்சயம் இடம்பெற வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அவருக்கு சிறப்பானதாக அமைந்திருந்தது. வழக்கமான அவரது ஷாட்களை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு எனது வாழ்த்துகள்” என்று கூறினார்.

தோனி எந்த இடத்தில் களமிறங்க வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு, ‘அதனை அவரிடம்தான் கேட்க வேண்டும்’ என்று பதில் அளித்தார்.

Sathish Kumar:

This website uses cookies.