மகேந்திர சிங் தோனியின் விக்கெட்டை வீழ்த்த உதவிய ரிஷப் பண்ட்! வெளியே சொன்ன ஆவேஷ் கான்!

மகேந்திர சிங் தோனியின் விக்கெட்டை கைப்பற்றுவதற்கு எனக்கு உதவிய ரிஷப் பண்ட்

இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மிக அற்புதமாக பந்து வீசிய இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் ஒருவர் அவேஷ் கான். அற்புதமாக பந்துவீசி மகேந்திர சிங் தோனி, விராட் கோலி ஆகியோரையே கலங்கடித்து க்ளீன் போல்ட் ஆக்கினார். ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடிய அவரை பிசிசிஐ ரிஷர்வ் வீரராக நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தேர்ந்தெடுத்துள்ளது. அவர் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் 5 டெஸ்ட் போட்டியில் பங்குகொள்ள இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய டெஸ்ட் அணியில் இணைய உள்ள அவேஷ் இப்பொழுது எனக்கு உதவிய ரிஷப் பண்ட் குறித்து சில வார்த்தைகளை கூறியுள்ளார்.

ரிஷப் பண்ட் எனக்கு உதவினார்

முதல் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக நாங்கள் விளையாடினோம். இந்த ஆண்டு எனது முதல் விக்கெட்டை மகேந்திர சிங் தோனியின் விக்கெட் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. மகேந்திர சிங் தோனி சிறிது காலம் கழித்து விளையாட வருகிறார். எனவே அவர் அவ்வளவாக பந்தை கனெக்ட் செய்ய மாட்டார் என்பதை நாங்கள் மூன்று முன்கூட்டியே அறிந்தோம். முதல் பந்தை சற்று ஆப் சைடு வீசினேன். பிறகு ரிஷப் பண்ட் என்னை சற்று கீழே இறக்கி பந்தை வீசி சொன்னார். அவரது ஆலோசனைப்படி சற்று நிதானமாக லெக் சைடு பார்த்து சற்று உயரம் கம்மியாக பந்து வீசினேன். அதன் காரணமாக அவர் இன்சைடு எட்ஜாகி அவுட்டானார்.

மூன்று வருடங்களுக்கு முன்பே நான் மகேந்திர சிங் தோனியின் விக்கெட்டை கைப்பற்றி இருந்து இருப்பேன். ஆனால் அப்பொழுது எதிர்பாராதவிதமாக அவர் அடித்த பந்தை எனது சக அணி வீரர் டிராப் செய்துவிட்டார். எனவே மூன்று ஆண்டுகாலம் கழித்து மகேந்திர சிங் தோனியின் விக்கெட்டை கைப்பற்றியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

நல்ல பார்மில் இருக்கும் ஆவேஷ் கான்

இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மொத்தமாக 14 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருக்கிறார். டெல்லி அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரரும் அவரே. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவரது பவுலிங் எக்கானமி 7.7 ஆகும்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய தொடர்ந்து டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு வந்துள்ளது. இந்த வாய்ப்பை தான் சரியாக பயன்படுத்திக் கொள்ளப் போவதாக தற்பொழுது அவர் கூறியுள்ளார்.

Prabhu Soundar:

This website uses cookies.