விராட் கோலி பத்தி தெரியாது… ஆனா இந்த பையன் சதம் அடிச்சா ரொம்ப சந்தோஷம்; ஹர்பஜன் சிங் ஓபன் டாக் !!

விராட் கோலி பத்தி தெரியாது… ஆனா இந்த பையன் சதம் அடிச்சா ரொம்ப சந்தோஷம்; ஹர்பஜன் சிங் ஓபன் டாக்

உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் சதம் அடித்து சாதனை படைக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளன.

கடந்த 2003ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி, இந்த முறை ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் முன்னாள் இந்திய வீரர்கள் அனைவரும் விரும்புவதால், பலரும் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங், இறுதி போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் சதம் அடிக்க வேண்டும் என விரும்புவதாக ஓபனாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், “ஸ்ரேயஸ் ஐயர் சுயநலமே இல்லாத சிறந்த கிரிக்கெட் வீரர். ஸ்ரேயஸ் ஐயர் இந்திய பெரிய பாராட்டுகளை பெறாத சிறந்த வீரர்கள் ஒருவர். மற்ற வீரர்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்களும், புகழும் கூட ஸ்ரேயஸ் ஐயருக்கு கிடைப்பது இலை. ஆனால் அவர் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை தொடர்ந்து மிக சிறப்பாக செய்து வருகிறார். இந்த உலகக்கோப்பை தொடரிலேயே 2 சதமும், 3 அரைசதமும் அடித்துள்ள ஸ்ரேயஸ் ஐயர் தனது சராசரியாக 75 ரன்களை வைத்துள்ளார். இது சாதரண விசயம் கிடையாது. இந்திய அணியில் தற்போது இருக்கும் சீனியர் வீரர்களுக்கு ஸ்ரேயஸ் ஐயர் சிறிதும் சளைத்தவர் இல்லை என்பதை அவரது பேட்டிங் நமக்கு காட்டுகிறது. காயத்தில் இருந்து குணமடைந்து, நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய அணிக்கு மீண்டும் திரும்பிய ஸ்ரேயஸ் ஐயர், இந்திய அணியில் நீண்ட காலமாக நிலவி வந்த மிடில் ஆர்டர் பிரச்சனையையும் தீர்த்து வைத்துவிட்டார் என்பதே உண்மை. இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு ஸ்ரேயஸ் ஐயரும் முக்கிய காரணம். ஸ்ரேயஸ் ஐயர் இறுதி போட்டியில் சதம் அடிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். கடந்த இரண்டு போட்டிகளிலும் சதம் அடித்து அசத்திய ஸ்ரேயஸ் ஐயர், இறுதி போட்டியிலும் சதம் அடித்தால், உலகக்கோப்பை தொடரில் ஹாட் ரிக் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார், ஸ்ரேயஸ் ஐயர் சதம் அடித்து பல சாதனைகள் படைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.