தோனியிடம் இருந்து இதனை ஆட்டைய போட வேண்டும்; மார்க் வுட் !!

தோனியிடம் இருந்து இதனை ஆட்டைய போட வேண்டும்; மார்க் வுட்

தோனி தலைமையிலான சென்னை அணியில் இடம்பிடித்துள்ளதை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு அவரிடம் இருந்து நிறைய கிரிக்கெட் நுணுக்கங்களை கற்று கொள்வேன் என்று மார்க் வுட் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் 11வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை  கோடிகளை குவித்து எடுத்து கொண்டன. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு விதத்தில் பலம் பொருந்திய அணியாக இந்த ஆண்டு களம் காண உள்ளது.

இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டை 1.5 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது.

இந்நிலையில் இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க் வுட், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளதன் மூலம், தோனி மற்றும் பிராவோவிடம் பல கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுக்கொள்ள ஆவலுடன் உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியின் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு மார்க் வுட் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, “ஐ.பி.எல் 2018ம் ஆண்டுக்கான தொடரில் சென்னை அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தததை பெருமையாக உணர்கிறேன். இது என்னை நான் முன்னேற்றி கொள்வதற்கு கிடைத்த வாய்ப்பு, குறிப்பாக சென்னை அணியின் கேப்டன் தோனியிடமும், விண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் பிராவோவிடம் இருந்தும் நிறைய விசயங்களை கற்று கொள்வேன். இறுதி கட்டத்தில் கூடுதல் அழுத்தம் இல்லாமல் விளையாடுவது எப்படி போன்ற நுணுக்கங்களை தோனியிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 

தடை காலம் முடிந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மார்க் வுட்டை போன்று, ஷர்துல் தாகூர், லுங்கி நிகிடி போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்த தொடரை சந்திக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;

தோனி, பிராவோ, ஜடேஜா, சுரெஷ் ரெய்னா, டூ பிளசிஸ், கேதர் ஜாதவ், ஜடேஜா, ராகுல் சர்மா, ஷர்துல் தாகூர், மார்க் வுட், லுங்கி நிகிடி, மிதுன் மன்கஸ்.

Mohamed:

This website uses cookies.