ப்ரித்வி ஷா இந்திய அணிக்காக 100 போட்டிகளில் விளையாடுவார்… ரிக்கி பாண்டிங் உறுதி !!

பிரித்வி ஷாவை நிச்சயம் ஒரு நல்ல வீரராக மாற்றுவேன் என்று டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

2018 முதல் டெல்லி அணியில் முக்கிய வீரராக வலம் வரும் பிரித்வி ஷா பலமுறை சிறப்பாக செயல்பட்டு பலமுறை டெல்லி அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதன் காரணமாக 2022 ஐபிஎல் தொடரிலும் பிரித்வி ஷாவை டெல்லி அணி தேர்ந்தெடுத்துள்ளது, தன் மீது வைத்த நம்பிக்கையை வீணடிக்காமல் 2022ஐபிஎல் தொடரிலும் பிரித்வி ஷா மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இளம் வீரரான பிரித்வி ஷா ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும் இந்திய அணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை இதன் காரணமாக பிரித்வி ஷா இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கப் படுகிறார்.

இந்த நிலையில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பிரித்விஷாவை ஒரு நல்ல வீரராக உருவாக்குவேன் என்று உறுதிமொழி அளித்துள்ளார்.

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசுகையில்,“ப்ரீத்விஷாவின் பேட்டிங் மிகவும் அருமையாக உள்ளது, அவருடைய விளையாட்டு கிட்டத்தட்ட என்னுடைய விளையாட்டை போன்று ஒத்திருக்கிறது, நிச்சயம் அவரை ஒரு சிறந்த வீரராக உருவாக்கி இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடும் அளவிற்கு அவரை தாயார் செய்வேன் என்று பாராட்டி பேசியிருந்தார்.

தான் விளையாடிய காலத்தில் ஜாம்பவானாக வலம்வந்த ரிக்கி பாண்டிங்,இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷாவை மிகவும் பாராட்டி அவருக்கு உறுதுணையாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளது, கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

2018 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு அறிமுகமான பிரித்விஷா காயம் காரணமாக சரியாக விளையாடவில்லை, அதற்குப்பின் உடற் தகுதியின் காரணமாகவும் இவரால் சிறப்பான ஆட்டத்தை தொடரமுடியவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Mohamed:

This website uses cookies.