இதென்னடா புதுசா இருக்கு.. ஜட்டு கொடுத்த ஐடியா வச்சு ரிஸ்வான் விக்கெட்டை எடுத்தேன்! – ஆட்டநாயகன் பும்ரா பேட்டி!

இப்படித்தான் ரிஸ்வான் விக்கெட்டை எடுத்தேன் என்று போட்டி முடிந்த பிறகு ஆட்டநாயகன் விருது பெற்ற ஜஸ்பிரீத் பும்ரா பேட்டி அளித்துள்ளார். இதில் ஜடேஜா கொடுத்த ஐடியா உதவியது என்றும் பேசியுள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. நன்றாக பேட்டிங் ஏது வாங்கிய பாகிஸ்தான் அணி ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் இருவரின் பார்ட்னர்ஷிப்பால் 150 ரன்கள் கடந்திருந்தது.

அதுவரை இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தான் அணி, 155 ரன்களுக்கு மூன்றாவது விக்கெட் பறிகொடுத்தது. பாபர் அசாம் 50 ரன்கள் அடித்தபின் அவுட்டானார். பின்னர் வரிசையாக விக்கெட்டுகள் சரியத்துவங்கின. கடைசி 36 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதோடு, 191 ரன்கள் அவுட் ஆகியது.

இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் அபார பந்துவீச்சு தான். பும்ரா, சிராஜ், குல்தீப், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றி இருந்தனர். இதில் பும்ரா வெறும் 7 ஓவர்களில் ஒரு மெய்டன் உட்பட வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

192 ரன்கள் இலக்கிய துரத்திய இந்திய அணி 30.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா 86 ரன்கள், ஷ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் அடித்தனர்.

சிறப்பாக பந்துவீசிய பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார். பும்ரா பேசியதாவது:

“இன்று பந்துவீசிய விதம் நல்ல உணர்வை கொடுக்கிறது. விரைவாக பிட்ச்சைப் பற்றி புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு பந்து வீசினேன். எளிதாக விக்கெட்டுகள் கிடைக்காது என்பதால் சரியான லைன் மற்றும் லென்த் வீசி வந்தேன் ரன்கள் அடிப்பதை கட்டுப்படுத்த முயற்சித்தேன்.

சிறுவயது முதலே நிறைய கேள்விகளை கேட்டு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்வேன். அப்படி ஒரு பழக்கம்தான் இன்றளவும் எனக்கு உதவுகிறது. பிட்ச் எப்படி இருக்கும் எந்த மாதிரியான பந்துகளை வீசினால் சரியாக இருக்கும் என்று நிறைய கேள்விகள் எழுப்பி தெரிந்து கொண்டேன்.

இன்று ஜடேஜா பந்து வீசியபோது சிறிய அளவில் டர்ன் ஆனதை பார்த்தேன். அதைப் பயன்படுத்தி குறைந்த வேகத்தில் பந்துவீசி நிறைய ஸ்பின் செய்து பார்த்தேன். அதன் பலன் தான் ரிஸ்வான் விக்கெட். ஜடேஜாவிடம் இருந்து கிடைத்த ஐடியா.

காயத்திற்கு பிறகு பயிற்சி செய்த போது, குறைந்த வேகத்தில் வீசும் பந்தை நிறைய பயிற்சி செய்தேன். மேலும் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதையும் பயிற்சி செய்தேன்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.