நியூசிலாந்து அணி 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. முதல் முறையாக 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றும் என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி மிக எளிதாக நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
பின்னர் அதற்கு அடுத்த உலக கோப்பை தொடரில் ( 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடர் ) மீண்டும் இறுதிப்போட்டி வரை நியூஸிலாந்து அணி சென்றது. இங்கிலாந்தில் நடந்த இந்த உலக கோப்பை தொடரில் கடைசி போட்டியை இங்கிலாந்து எதிராகவே விளையாடியது. ஆட்டம் சமனில் முடிவடைந்த நிலையில் சூப்பர் ஓவர் நிர்ணயிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரும் வரும் சமனில் முடிவடைய ஐசிசி விதிமுறைப்படி இங்கிலாந்து அணி அந்த போட்டியில் அதிக பவுண்டரிகளை அடித்த காரணத்தினால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக ஐசிசி அறிவித்தது. தொடர்ந்து 2 முறை நியூசிலாந்து அணி உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது அனைத்து ரசிகர்களையும் வருத்தமடையச் செய்தது.
அந்தத் தோல்வியை என்னால் மூன்று நாட்களுக்கு தாங்கிக்கொள்ள முடியவில்லை
இந்நிலையில் நியூசிலாந்து முன்னாள் ஜாம்பவான் பந்துவீச்சாளர் ஷேன் பாண்ட் 2019ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரின் இறுதி போட்டி நடந்த வேளையில், அவருடைய அனுபவத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதி போட்டியில் மோதிய அன்று அவர் அமெரிக்காவில் இருந்தாக கூறினார். நெதர்லாந்து பயணிப்பதற்காக சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் தான் இருந்ததாக கூறினார். இறுதிப் போட்டியின் கடைசி பந்து வீசப்பட்ட நிலையில் நான் செக்யூரிட்டி சம்பந்தமான வேலைகளில் இருந்தேன். அதனால் போட்டியின் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியாமல் போனது.
பின்னர் அனைத்து வேலைகளும் முடிந்தவுடன் இறுதிப் போட்டியின் முடிவை அறிந்தேன். இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி அடைந்த செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. அன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு என்னால் அந்த செய்தியில் இருந்து வெளிவர முடியவில்லை.
நிச்சயமாக நியூசிலாந்து அணியை வெற்றி பெற்றுவிடும் என்று நினைத்த வேளையில் நியூசிலாந்து அணியின் தோல்வி என்னை மூன்று நாட்களுக்கு சோகத்தில் ஆழ்த்தியது என்று கூறியுள்ளார். இருப்பினும் இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். இந்த வெற்றி அவர்களுக்கு தகுந்த ஒன்றுதான் என்றும் ஷேன் பாண்ட் கூறினார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஷேன் பாண்ட்
ஷேன் பாண்ட் நியூசிலாந்து அணிக்காக 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்டுகளையும், 82 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 147 விக்கெட்டுகளையும், 20 டி20 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளையும் ஷேன் பாண்ட் கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் போட்டிகளிலும் 8 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.