2002ஆம் ஆண்டு நடந்த அண்டர் 19 உலக கோப்பை தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆகவும் அந்த அணியின் கேப்டனாகவும் பார்த்தீவ் பட்டேல் களமிறங்கி விளையாடினார். அதேபோல தினேஷ் கார்த்திக் 2004ஆம் ஆண்டு நடந்த அண்டர் 19 உலக கோப்பை தொடரில் களமிறங்கி விளையாடினார். இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் விளையாடுவதை பார்த்து பின்னாளில் இந்திய அணிக்கு நிறைய போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக விளையாடுவார்கள் என்று நினைத்த வேளையில் 2005 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி களமிறங்கினார்.
அதற்குப் பின்னர் அனைத்து வாய்ப்புகளும் மகேந்திர சிங் தோனிக்கு சென்றது. இவர்கள் இருவரை காட்டிலும் தோனி மிக சிறப்பாக விளையாடிய காரணத்தால் அனைத்து வாய்ப்புகளும் அவருக்கு சென்றது. இதுகுறித்து தற்போது பார்த்தீவ் பட்டேல் ஒரு சில விஷயங்களைப் பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியில் பார்த்தீவ் பட்டேல்
2002ஆம் ஆண்டு முதல் முதலாக இந்திய அணியின் டெஸ்ட் வீரராக களம் இறங்கினார். மிக சிறப்பாக விளையாடிய காரணத்தினால் 2003 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் ஒரு வீரராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் அந்த உலக கோப்பை தொடரில் இவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் 2004ம் ஆண்டுக்குப் பின்னர் டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு பறிபோனது.
அதற்கு பிறகு 2010ஆம் ஆண்டு ஒருநாள் அணியில் மீண்டும் இடம் பிடித்து விளையாடினார். டெஸ்ட் போட்டியிலும் 2016ஆம் ஆண்டு மீண்டும் ஒருமுறை களமிறங்கி இங்கிலாந்து அணிக்கு எதிராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக விளையாடியது குறிப்பிடத்தக்கது. அதற்கு பின்னால் 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்.
இதற்கு பின்னர் இந்திய அணியில் தற்போது ரிஷப் பண்ட் மற்றும் நிறைய இளம் வீரர்கள் இருக்கையில் இவருக்கான வாய்ப்பு இனி கிடைப்பது மிகவும் கடினம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக மொத்தமாக 25 டெஸ்ட் போட்டிகள் 38 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார்.
எனக்கு வாய்ப்புகள் நிறைய கிடைக்கப் படவில்லை
இந்நிலையில் சமீபத்தில் ஒரு உரையாடலில் பார்த்தீவ் பட்டேல், எனக்கு ஆரம்பத்தில் டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. நான் அந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். மேலும் இனி வாய்ப்புகள் எனக்கு கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்த வேளையில் மகேந்திர சிங் தோனியின் வருகை அனைத்தையும் மாற்றி அமைத்தது.
அதற்கு பின்னர் நிறைய வாய்ப்புகள் எனக்கு வழங்கப்படவில்லை. ஒருவேளை எனக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருந்தால் நான் என்னுடைய ஆட்டத்தை நிரூபிக்க அது சரியாக அமைந்து இருக்கும். இருப்பினும் ஆரம்பத்தில் கிடைத்த வாய்ப்புகளை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது என்னுடைய தவறு என்றும் பார்த்தீவ் பட்டேல் கூறி முடித்தார்.
இரஞ்சி டிராபி தொடரில் குஜராத் அணிக்காக 2016 மற்றும் 2017ஆம் ஆண்டில் மிக அற்புதமாக விளையாடி முதல் முறையாக குஜராத் அணி இரஞ்சி டிராபி தொடரை கைப்பற்ற மிகப்பெரிய அளவில் பார்த்தீவ் பட்டேல் உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.