சென்ற வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டியில் விராட் கோலி ஒரு கட்டத்தில் சூரியகுமார் யாதவை சீண்டினார். அந்த சம்பவம் அப்போது மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
இப்பொழுது கூட அந்த சம்பவத்தை பற்றி ரசிகர்கள் சூரியகுமார் இடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு சூர்யகுமார் யாதவ் தன்னுடைய பதிலை தற்பொழுது ரசிகர்களிடம் அளித்துள்ளார்.
மும்பையை வெற்றி பெற செய்த சூர்யகுமார் யாதவ்
அந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் களமிறங்கிய மும்பை அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறியது. ஓபனிங் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க, மும்பை தோல்வி பெறும் என்று அனைவரும் நம்பினார்கள்.
ஆனால் அதன் பின்னர் களமிறங்கிய சூரியகுமார் இவ்வளவு 43 பந்துகளில் 79 ரன்கள் குவித்து இறுதி வரை அவுட் ஆகாமல் மும்பை அணியை தனியாக நின்று வெற்றி பெறச் செய்தார். அந்த ஆட்டத்தில் அவர் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி என்னை சீண்டியது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது
விராட் கோலி எப்பொழுதுமே எதிரணி பேட்ஸ்மேன்களை அவ்வளவு சீக்கிரம் சீண்டி விட மாட்டார். ஆனால் அன்று என்னை சீண்டியதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நான் அந்தப் போட்டியில் நின்றால் நிச்சயமாக மும்பை அணி வெற்றி பெற்றுவிடும் என்று அவர் நினைத்து இருந்திருக்கிறார். அதன் காரணமாகவே என்னை அவர் சீண்டியதாக நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் சூர்யகுமார் யாதவ் விராட் கோலியின் மிகத் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு மனதிற்கு பிடித்தமான ஒரு வீரர் தன்னை சீண்டுவதை மிகப்பெரிய அளவில் எடுத்துக்கொள்ள மாட்டார் என்பதும் நமக்குத் தெரியும்.
இருப்பினும் இது பற்றி மேலும் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஆட்டத்தில் நான் எப்பொழுதும் அமைதியாகத் தான் இருப்பேன். அவ்வளவு எளிதில் யாருடனும் சர்ச்சையில் ஈடுபட மாட்டேன் என்று கூறியுள்ளார். என்னுடைய நோக்கம் நன்றாக விளையாடி அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வது மட்டுமே என்று இறுதியாக கூறி முடித்தார்.