அத பத்தி எல்லாம் எனக்கு கொஞ்சம் கூட கவலை இல்ல; ஷிகர் தவான் பெருந்தன்மை பேச்சு !!

நேற்று முன்தினம் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 ஒருநாள் போட்டிகளில் முதல் போட்டி நடைபெற்றது, இதில் இந்திய அணி திரில்லிங் வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது.

சமீபகாலமாக தனது பார்மை நிரூபிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த ஷிகர் தவான் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மிக சிறப்பாக செயல்பட்டு அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார்.

இந்த போட்டியில் ஷிகர் தவான் மிக சிறப்பாக செயல்பட்டு 106 பந்துகளில் 98 ரன்கள் (11 ஃபோர்களும் 2 சிக்ஸ்களும்) எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் புள் ஷாட் அடிக்க முயன்று தனது விக்கெட்டை பறிகொடுத்தார், அடங்கும்.முதலில் மந்தமாக விளையாடத் தொடங்கிய ஷிகர் தவான் பின் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணி பந்து வீச்சாளர்களை திணறடித்தார்.இந்நிலையில் 2 ரன்கள் அடித்தால் சதம் என்ற நிலையில் ஷிகர் தவான் அவுட் ஆனது இந்திய ரசிகர்களிடத்தில் மிகப் பெரும் கவலையை ஏற்படுத்தியது.

இருந்தபோதும் ஷிகர் தவானின் 98 ரன்கள் உதவியோடு இந்திய அணி 317 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது, இந்திய அணியின் இந்த வெற்றிக்கு வெற்றிக்கு முக்கிய வீரராக திகழ்ந்த ஷிகர் தவானுக்கு ஆட்டநாயகன் பரிசு வழங்கப்பட்டது, இருந்தபோதும் சதத்தை தவறவிட்ட ஷிகர் தவானுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வல்லுனர்கள் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இதுபற்றி பத்திரிகையாளர்கள் இடத்தில் தெரிவித்த பேட்டியில் அவர் கூறியதாவது, மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியது நினைத்து மிகவும் சந்தோஷப்படுகிறேன் மேலும் அதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளேன் என்று கூறிய அவர் நான் இந்த நிலைமைக்கு வருவதற்கு அதிகமாக பயிற்சி எடுத்து உள்ளேன்.

மேலும் எனக்கும் ரோஹித்துக்கும் கொஞ்ச நேரம் பொறுத்தால் அதிகமான ரன்களை அடிக்க முடியும் என்று தெரியும், நான் 98 ரன்களில் அவுட்டான அதை நினைத்து வருத்தப் படவில்லை, எனது சிந்தனையெல்லாம் அணிக்கு எவ்வாறு ரன்களில் சேர்ப்பது என்பது மட்டும்தான், இந்தப் போட்டி இல்லை என்றால் அடுத்த போட்டியில் அடித்துக் கொள்ளலாம், என்று கூறிய அவர் எனக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் ரன்கள் அடிப்பேன் என்று பெருந்தன்மையோடு கூறினார்.

Mohamed:

This website uses cookies.