ஒருநாள் அணிக்கு இவர் கண்டிப்பாக வேண்டும்! விராட் கோலிக்கு கட்டளையிட்ட முன்னாள் வீரர் திலீப் ஜோஷி!

ஒருநாள் அணிக்கு இவர் கண்டிப்பாக வேண்டும் விராட் கோலிக்கு கட்டளையிட்ட முன்னாள் வீரர் திலீப் ஜோஷி

இந்திய அணி விராட் கோலியின் தலைமையில் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஒருநாள் தொடரிலும் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்று வருகிறது, கிட்டத்தட்ட விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 70 சதவீத வெற்றிகளை ஒரு கேப்டனாக வைத்திருக்கிறார்,

செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பது போல் செல்லும் இடமெல்லாம் வெற்றிகளை குவித்து வருகிறார், டெஸ்ட் போட்டியிலும் ஒருநாள் போட்டிகளிலும் இவரது கேப்டன்ஷிப் அபாரமாக இருக்கிறது, டெஸ்ட் போட்டிகளை வென்று அணியையும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் என்று தனி அணியையும் கட்டமைத்து வைத்துள்ளார்.

இதில் டெஸ்ட் போட்டியில் இருப்பவர்தான் 32 வயதான புஜாரா. ராகுல் டிராவிட்டுக்கு இவர்தான் என்று முத்திரை குத்தப்பட்டார். இவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார். ஒருநாள் போட்டிகளில் பெரிதாக ஆடியதில்லை. இந்நிலையில் முன்னாள் வீரர் ஜோஸ் இவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்..

அதாவது புஜாரா போல் ஒரு வீரரை எனது ஒருநாள் அணியில் இருந்து நீக்கவே மாட்டேன். அவரை ஒருபுறம் நிற்க வைத்துவிட்டு, ஐம்பதாவது ஒருவர் ஆடு என்று கூறி விடுவேன். அவரால் இது முடியும். அவரைப் போன்று ஒரு உலக தரமிக்க ஒரு வீரரை அணியில் வைக்காமல் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆட வைப்பது என்னை வருத்தமடைய வைக்கிறது என்று கூறியுள்ளார் திலீப் ஜோஷி.

Mohamed:

This website uses cookies.