என் பேட்டிங் முன்னாடி பும்ரா குட்டி குழந்தை… நான் இவனைவிட பிஸ்தாவ பாத்திருக்கேன்: முன்னாள் பாக்., வீரர் ஓபன் டாக்

நான் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்களை எதிர்கொண்டிருக்கிறேன். எனது பேட்டிங் முன் பும்ராஹ் பச்சிளம் குழந்தை என பேட்டியளித்துள்ளார் முன்னாள் பாக்., வீரர் அப்துல் ரசாக்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக், அவரது காலகட்டத்தில் உலக அளவில் தலைசிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்தார். பலமுறை இந்திய அணிக்கு எதிராகவும் கடைசி கட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை பெற்று தந்திருக்கிறார். ஆதலால், இவரை இந்தியர்கள் பலர் எளிதில் மறந்திருக்கமாட்டார்கள்.

அப்துல் ரசாக் 46 டெஸ்ட், 265 ஒருநாள் மற்றும் 32 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஓய்விற்கு பின், பெரிதளவில் மீடியாவின் வெளிச்சத்திற்கு வராமல் இருந்தார். இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றிக்கு பேட்டியளித்தார்.

அப்போது, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்பிரீத் பூம்ராவை கடைசி பகுறித்து பேசிய அப்துல் ரசாக்,

“கிளென் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற தலைசிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நான் கடைசி ஓவரை எதிர்கொண்டிருக்கிறேன். அதனால், பூம்ரா எனக்கு வெறும் ‘சிறு குழந்தை’ மாதிரி. நான் எளிதில் ஆதிக்கம் செலுத்தி, அவருடைய பந்துவீச்சை விளாசுவேன். எனது காலத்தில் தலைசிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டதால் பூம்ரா போன்ற பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் எனக்கு சிரமம் இருக்காது. அவருக்குதான் நெருக்கடி இருக்கும்” என்றார்.

மேலும் இதைத்தொடர்ந்து பூம்ராவின் பந்துவீச்சு பாணியைப் பாராட்டி பேசிய அவர்,

“பூம்ரா சிறப்பாக செயல்படுகிறார். நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளார். அவருடைய பந்துவீச்சு பாணி சற்று இயல்புக்கு மாறான முறையில் இருக்கிறது. அவர் பந்தை மிகச் சரியாக கையாளுகிறார். அதனால்தான் அவர் திறம்பட இருக்கிறார்” என்றார்.

1996-2011 வரை பாகிஸ்தான் அணிக்கு ஆடிய அப்துல் ரசாக், 2000களில் ஆல்ரவுண்டர் தரவரிசையில் தொடர்ந்து சில ஆண்டுகள் 2வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.