நான் உலகக்கோப்பை அணியில் ஆட விரும்புகிறேன் – சுனில் நரேன்

உலகக்கோப்பை தொடரில் ஆட மிகவும் விரும்புவதாக சுனில் நரேன் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடக்கிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் தங்களது உலககோப்பையில் ஆடும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்து விட்டனர்.

வேஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம், கடந்த மாதம் உலககோப்பைக்கு என பிரத்யேகமாக தேர்வுக்குழு நியமித்து புதிய தலைவரையும் நியமித்தது. அதேபோல புதிய பயிர்ச்சியாளரையும் நியமித்தது.

West Indies’ Sunil Narine (C) celebrates taking the wicket of England’s David Willey during the T20 International cricket match between England and West Indies at The Emirates Riverside, Chester-le-Street in north east England on September 16, 2017.
West Indies made 176 for nine in the lone Twenty20 international at Chester-le-Street on Saturday. / AFP PHOTO / Lindsey PARNABY / RESTRICTED TO EDITORIAL USE. NO ASSOCIATION WITH DIRECT COMPETITOR OF SPONSOR, PARTNER, OR SUPPLIER OF THE ECB (Photo credit should read LINDSEY PARNABY/AFP/Getty Images)

சில தினங்களுக்கு முன்பு 15 பேர் கொண்ட அணியை தேர்வுக்குழு வெளியிட்டது. அந்த பட்டியல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. மூத்த வீரர் கிறிஸ் கெயில் அணியில் இடம்பெற்றிருந்தார். அதேபோல, ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் எர்வின் லெவிஸ் இருவருக்கும் இடம் அளிக்கப்பட்டது.

ஆனால், எதிர்பார்த்த வீரர்கள் கிரென் பொல்லார்ட், சுனில் நரேன் இருவருக்கும் இடம் அளிக்கப்படவில்லை. 2016ஆம் ஆண்டிலிருந்து அவர் அணியில் ஆடாததால் அவருக்கு இடம் கொடுக்கவில்லை என தேர்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அனைத்து நாட்டு டி20 தொடர்களிலும் ஆடி அசத்துவதால் இடம் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு ஏமாற்றமே மிச்சம்.

இதுகுறித்து பேசிய சுனில் நரேன் கூறியதாவது, “வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடுவது எப்போதும் என் மனதிற்கு நெருக்கமான ஒன்று. அதை நான் தற்போது மிகவும் மிஸ் செய்கிறேன்.”

“ஆனால், ஒருநாள் போட்டிகளில் 10 ஓவர்கள் வீச எனது வீரர்கள் தயாராக இல்லை. டி20 போட்டிகளில் ஆடுவது சரியாக இருக்கும். 4 ஓவர்களுக்கு என்னால் தாக்குப்பிடிக்க முடியும். எனக்கு அணியில் ஆட விருப்பம் இருந்தாலும், முழுமையாக தயார் ஆகாமல் அணியில் ஆடுவது சரியானது இல்லை என்பதால் ஆடவில்லை.” என்றார்.

2017 ஆம் ஆண்டுக்கு பிறகு சுனில் நரேன் டி20 அணிகளில் ஆடவில்லை. குணமடைந்து விரைவில் அணிக்கு திரும்புவார் என தெரிகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.