மும்பை அணியா? இந்திய அணியா? இரண்டில் எது முக்கியம் ; அசத்தல் பதில் அளித்த ரோகித்!
ஐபிஎல் தொடரிலா? டி20 உலகக்கோப்பை தொடரா? இரண்டில் எதில் முக்கியத்துவம் கொடுத்து ஆடுவேன் என அதிரடி துவக்க வீரர் ரோகித் பதிலளித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் மட்டுமல்லாது அனைத்து நாடுகளின் கிரிக்கெட் தொடர்களும் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஒருசில நாடுகளில் வைரஸ் தாக்கம் குறைவதால் வீரர்கள் மெல்லமெல்ல பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு, ஜூலை மாதம் விண்டீஸ் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. பல சோதனைகளுக்கு பிறகே வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், இரண்டு வாரங்களுக்கு வீரார்கள் தனித்தனியாக பயிற்சியை மேற்கொள்ளவேண்டும் என்கிற நிபந்தனையும் உண்டு.
ஆனால், இந்தியாவில் தற்போது நாள் ஒன்றிற்கு 5000-க்கும் அதிகமானோர் பாதிப்படைந்து வருவதால், ஜூலை மாதம் வரை வீரர்களுக்கு பயிற்சிகள் துவங்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் இறுதியில் நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் நடைபெறாததால், பிசிசிஐ க்கு சுமார் 4000 கோடி ருபாய் வருமானம் இழப்பீடு ஏற்பட்டுள்ளதை சரிசெய்ய ஆகஸ்ட்-அக்டொபர் உள்ளாக ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் தொடரை நடத்த ஆலோசனைகள் தீவிரமாக நடைபெறுகிறது.
அதேநேரம், அக்டொபர் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் நடத்த திட்டமிட்டுள்ளது ஐசிசி. ஐபிஎல் முடித்த உடன் எவ்வாறு உலககோப்பைக்கு வீரர்கள் செல்ல இயலும் என்கிற கேள்வியும் இங்கு எழுகிறது. இதனால், பிசிசிஐ க்கு கடும் சிக்கல் எழுந்துள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை இரண்டில் எதற்கு முக்கியத்துவம் தருவீர்கள் என நேரலை ஒன்றில் ரோகித் சர்மாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை இரண்டிலும் ஆடுவதற்கு விரும்புகிறேன். ஐபிஎல் எனக்கு நல்ல உத்வேகத்தை கொடுக்கும். அதைக்கொண்டு உலகக்கோப்பையில் நன்கு செயல்பட இயலும்.
ஆஸ்திரேலிய மண்ணில் ஆடுவது சவாலானது. இருப்பினும், ஐபிஎல் தொடர் நடந்தால், உலககோப்பைக்கு தயாராக போதிய நேரம் கிடைக்காது என்பதால், வீரர்கள் அதற்க்கு முன்னதாக திட்டமிட்டு தயாராக வேண்டும். என்னைப் பொறுத்தவரை இரண்டுமே முக்கியம் என்பேன்.” என்றார்.