கொல்கத்தா அணி குறித்து தனது நிலைபாட்டை தெரிவித்த ஆன்ட்ரு ரஸல்!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான 32 வயதான ஆந்த்ரே ரஸ்செல் ஆன்-லைன் உரையாடலில் கூறியதாவது:-

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் போது நான் உண்மையிலேயே சிலிர்த்து போகிறேன் என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். கரிபீயன் பிரிமியர் லீக் போட்டியின் போதும் இதே போன்று உத்வேகம் ஏற்படுகிறது. ஆனாலும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதுவும் கொல்கத்தா ஈடன்கார்டனில் ஆடுவதற்கு நிகர் எதுவும் கிடையாது. கொல்கத்தா அணிக்காக 6 சீசனில் விளையாடி வருகிறேன்.

ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து அனுபவித்து ஆடியிருக்கிறேன். எனது கடைசி ஐ.பி.எல். போட்டி வரை கொல்கத்தா அணிக்காக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். 2 ஆட்டங்களில் சோபிக்காமல், அடுத்து 3-வது ஆட்டத்தில் இறங்கும் போதும் கூட ரசிகர்களின் ஆரவாரமும், வரவேற்பும் ஒரே மாதிரியே இருக்கும். இது என்னை மிகவும் கவர்ந்த விஷயம்.

கொரோனா வைரஸ் காரணமாக 13 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நிறுத்திவைக்கப்படுள்ளது. இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 29 ஆம் தேதி துவங்கயிருந்தது. ஆனால் நாளுக்கு நாள் அதிகரித்த கொரோனா வைரஸ் காரணமாக வீரர்கள் நலம் கருதி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.ப

இந்நிலையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின் கிரிக்கெட் போட்டிகள் நடந்த திட்டமிடப்பட்டாலும் அதற்காக சில விதிமுறைகள் அமல் படுத்தப்படும் என தெரிகிறது. அதன் ஒரு பகுதியாக ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்துவது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. இப்படி ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளில் பங்கேற்பது புது அனுபவமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mumbai: Kolkata Knight Riders’ Andre Russell celebrates fall of Evin Lewis’ wicket during an IPL 2018 match between Mumbai Indians and Kolkata Knight Riders at Wankhede Stadium in Mumbai, on May 6, 2018. (Photo: IANS)

இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நிச்சயம் நடக்கும் என சுமார் 60 சதவீதம் ரசிகர்கள் நம்புவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மைடீம்11 என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் சுமார் 10,000 பேர் கலந்து கொண்டனர். அதில் மீண்டும் விளையாட்டு போட்டிகள் விரைவில் திரும்பும் என்றும், ஆனால் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நீண்ட நாட்கள் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“இந்தாண்டு இறுதியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கும் என இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 83 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 40 சதவீதம் பேர் அடுத்தாண்டுக்கு முன்பாக மீண்டும் திரும்பும் என தெரிவித்துள்ளனர். மேலும் 13 சதவீதம் பேர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் இல்லாமல் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். ” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.