பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கலாம், ஆனால் இவர் தான் சிறந்த கேப்டன்; ஓபனாக பேசிய ஷாகின் அப்ரிடி !!

பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சகீன் அப்ரிடி பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் சிறந்த கேப்டன் யார் என்பது குறித்து.

பாகிஸ்தான் நாட்டில் பிரபல்யமாக நடத்தப்பட்டுவரும் பிஎஸ்எல் தொடரில் லாகூர் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சகீன் அப்ரிடி பாகிஸ்தான் அணிக்காக மிக சிறந்த முறையில் பந்துவீசி பல விக்கெட்களை பெற்றுக்கொடுத்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவிகரமாக இருந்திருக்கிறார்.

குறிப்பாக நடைபெற்று முடிந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் விக்கெட்களையும் மிக எளிதாக வீழ்த்தி அசத்தினார். இவருடைய அபாரமான பந்து வீச்சின் மூலம் உலகின் பல்வேறு கிரிக்கெட் வல்லுனர்களாலும் மிகவும் அதிகமாக பாராட்டப்பட்டு வந்தார்.

உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான சகீன் அஃப்ரிடி பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் பாபர் அசாம் மற்றும் முஹம்மது ரிஸ்வான் குறித்து தனது கருத்தை பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், எனக்கு முஹம்மது ரிஸ்வான் அவரின் குணம் மிகவும் பிடிக்கும் நான் அவருடன் உள்ளூர் போட்டியில் கேபிகே அணியில் ஒன்றாக விளையாடி உள்ளேன், என்னைப் பொறுத்தவரை முஹம்மது ரிஸ்வான் தான் சிறந்த கேப்டன்களில் முதன்மையானவர் அடுத்து தான் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் என்று சகீன் அஃப்ரிடி பேசியுள்ளார்.

மேலும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் குறித்து பேசிய சகீன் அஃப்ரிடி, என்னுடைய விருப்பமான நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்றால் அது பாபர் அசாம் தான், ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் பாகிஸ்தான் அணிக்கு சிறந்த முறையில் பங்காற்றி கொண்டு வருகிறார், மேலும் அவருடைய தலைமையின் கீழ் நாங்கள் முன்னேறி வருகிறோம் என்று பாபர் அசாம் குறித்து சகீன் அப்ரிடி பேசியிருந்தார்.

தற்பொழுது நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் 150+ ரன்கள் அடித்த பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் ஜோடி என்று முஹம்மது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.