ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ளது. மேலும், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதன் முடிவில் மூலமாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியம் மாற்றத்துடன் வெளியிட்டுள்ளது.
அணிகள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி எப்போதும் சிம்ம சொப்பனமாக நம்பர் ஒன் இடத்தில் மகுடம் தரித்து அமர்ந்துள்ளது. வீரர்கள் தரவரிசை பட்டியலில் விராட் கோலி முதலிடத்திலும், புஜாரா மூன்றாம் இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மட்டும் 5 வது இடத்தில் உள்ளார் மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 9வது இடத்தை பிடித்துள்ளார்.
டெஸ்ட் அணி தரவரிசை
| நிலை | அணி | போட்டிகளில் | புள்ளிகள் | மதிப்பீடு |
| 1 | இந்தியா | 43 | 5007 | 116 |
| 2 | தென் ஆப்பிரிக்கா | 39 | 4280 | 110 |
| 3 | இங்கிலாந்து | 49 | 5310 | 108 |
| 4 | நியூசிலாந்து | 30 | 3213 | 107 |
| 5 | ஆஸ்திரேலியா | 41 | 4143 | 104 |
| 6 | இலங்கை | 45 | 4103 | 89 |
| 7 | பாக்கிஸ்தான் | 32 | 2803 | 88 |
| 8 | மேற்கிந்திய தீவுகள் | 35 | 2463 | 70 |
| 9 | வங்காளம் | 25 | 1727 | 69 |
| 10 | ஜிம்பாப்வே | 11 | 138 | 13 |
டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை
| நிலை | ஆட்டக்காரர் | அணி | மதிப்பீடு |
| 1 | விராத் கோலி | இந்தியா | 922 |
| 2 | கேன் வில்லியம்சன் | நியூசிலாந்து | 897 |
| 3 | சேதுஷ்வர் புஜாரா | இந்தியா | 881 |
| 4 | ஸ்டீவ் ஸ்மித் | ஆஸ்திரேலியா | 857 |
| 5 | ஹென்றி நிக்கோலஸ் | நியூசிலாந்து | 775 |
| 6 | டேவிட் வார்னர் | ஆஸ்திரேலியா | 756 |
| 7 | ஐடென் மார்கரம | தென் ஆப்பிரிக்கா | 741 |
| 8 | ஜோ ரூட் | இங்கிலாந்து | 740 |
| 9 | ஹஷிம் அம்லா | தென் ஆப்பிரிக்கா | 711 |
| 10 | டிமுத் கருணாரட்ன | இலங்கை | 693 |
டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசை
| நிலை | ஆட்டக்காரர் | அணி | மதிப்பீடு |
| 1 | கஜிஸோ ரபாடா | தென் ஆப்பிரிக்கா | 882 |
| 2 | பாட் கம்மின்ஸ் | ஆஸ்திரேலியா | 878 |
| 3 | ஜேம்ஸ் ஆண்டர்சன் | இங்கிலாந்து | 860 |
| 4 | வெர்னான் பிலாண்டர் | தென் ஆப்பிரிக்கா | 809 |
| 5 | ரவீந்திர ஜடேஜா | இந்தியா | 794 |
| 6 | ஜேசன் ஹோல்டர் | மேற்கிந்திய தீவுகள் | 771 |
| 7 | ட்ரென்ட் போல்ட் | நியூசிலாந்து | 770 |
| 8 | முகம்மது அப்பாஸ் | பாகிஸ்தான் | 767 |
| 9 | டிம் சவுதி | நியூசிலாந்து | 763 |
| 10 | ரவிச்சந்திரன் அஸ்வின் | இந்தியா | 759 |
டெஸ்ட் ஆல்-ரவுண்டர்ஸ் தரவரிசை
| நிலை | ஆட்டக்காரர் | அணி | மதிப்பீடு |
| 1 | ஜேசன் ஹோல்டர் | மேற்கிந்திய தீவுகள் | 440 |
| 2 | ஷகிப் அல் ஹசன் | வங்காளம் | 415 |
| 3 | ரவீந்திர ஜடேஜா | இந்தியா | 387 |
| 4 | பென் ஸ்டோக்ஸ் | இங்கிலாந்து | 344 |
| 5 | வெர்னான் பிலாண்டர் | தென் ஆப்பிரிக்கா | 341 |