உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளை கொண்டு ஐசிசி வெளியிட்டுள்ள அணியில் ஒரேயொரு இந்திய வீராங்கனை மட்டுமே இடம் பிடித்துள்ளார்.
பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. நேற்று மேல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளை கொண்டு ஐசிசி உலக கோப்பை லெவன் அணியை அறிவித்துள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த லெக்-ஸ்பின்னர் பூனம் யாதவ் மட்டும் இடம் பிடித்துள்ளார்.
ஐசிசி வெளியிட்டுள்ள அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. அலிசா ஹீலி (ஆஸ்திரேலியா- விக்கெட் கீப்பர்), 2. பெத் மூனி (ஆஸ்திரேலியா), 3. நாட் ஸ்கிவர் (இங்கிலாந்து), 4. ஹீதர் நைட் (இங்கிலாந்து), 5. மெக் லானிங், 6. லாரா வால்வார்த் (தென்ஆப்பிரிக்கா), 7. ஜெஸ் ஜொனாஸ்சன் (ஆஸ்திரேலியா), 8. சோபி எக்லெஸ்டோன், 9. அன்யா ஷ்ருப்சோல், 10. மேகன் ஸ்கட், 11. பூனம் யாதவ் (இந்தியா), 12. ஷபாலி வர்மா (இந்தியா).
இந்தியா – ஆஸ்திரேலியா பெண்கள் அணி விளையாடிய டி20 உலக கோப்பை இறுதி போட்டியை மெல்போர்ன் மைதானத்தில் 86,174 பேர் பார்வையிட்டது சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா பெண்கள் அணி மோதிய டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. பொதுவாக ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டிதான் மெல்போர்ன் மைதானத்தில் நடத்தப்படும். டிசம்பர் 26-ந்தேதி தொடங்கும் முதல் நாளில் ரசிகர்களால் மைதானம் நிரம்பி வழியும்.
மைதானத்தின் முழு இருக்கைகளான 86,1764-ம் நிரம்பிவிடும். அதேபோல் இன்று மைதானம் நிரம்பி இருந்தது. ஆஸ்திரேலியாவில் இதற்குமுன் பெண்கள் மோதும் எந்தவொரு போட்டிக்கும் இதுபோன்று ரசிர்கள் கூடியது கிடையாது. தற்போதுதான் இவ்வாறு கூடியுள்ளது. இதன்மூலம் இந்த போட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.