டெஸ்ட் போட்டிகளில் இனி “டாஸ்” இல்லை; ஐ.சி.சி., தீவிர ஆலோசனை !!

டெஸ்ட் போட்டிகளில் இனி “டாஸ்” இல்லை; ஐ.சி.சி., தீவிர ஆலோசனை !!
டெஸ்ட் போட்டிகளில் இனி “டாஸ்” இல்லை; ஐ.சி.சி., தீவிர ஆலோசனை

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பின்பற்றப்பட்டு வரும் டாஸ் போடும் வழக்கத்தை மாற்றுவது குறித்து ஐசிசி ஆலோசனை நடத்தி வருகிறது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், போட்டியை நடத்தும் நாடு அந்த அணிக்கு ஏற்றவாறு பிட்ச் அமைத்து கொள்கின்றன. இதனால் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் அணிகள், அந்த நாட்டு மைதானத்தின் பிட்ச் தன்மை குறித்து புரிந்து கொள்வதில் பல சிரமங்கள் உள்ளன.

டெஸ்ட் போட்டிகளில் இனி “டாஸ்” இல்லை; ஐ.சி.சி., தீவிர ஆலோசனை !! 1டெஸ்ட் போட்டிகளில் இனி “டாஸ்” இல்லை; ஐ.சி.சி., தீவிர ஆலோசனை !! 1

இதனால் வெளிநாடுகளுக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட செல்லும் அணி டாஸ் மூலம் மட்டும் தங்கள் அணி பேட்டிங் செய்வதா, பவுலிங் செய்வதா என்ற முடிவை எடுக்க முடிகிறது. இது போட்டியை நடத்தும் அணிக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது. இதனால் போட்டி, போட்டியை நடத்தும் அணியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது வெளிநாட்டில் இருந்து விளையாட செல்லும் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைகிறது.

இதன்காரணமாக கிரிக்கெட் போட்டிகளின் போது டாஸ் போடும் முறையை மாற்ற ஐசிசி ஆலோசனை நடத்தி வருகிறது. அதன்படி போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்வது யார் என்பதை எதிரணியினர் தீர்மானிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனையை அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சோதித்துப் பார்க்க ஐசிசி திட்டமிட்டுள்ளது.

அதாவது எந்த அணி பயணம் செய்த அணியோ அது முதலில் பீல்டிங்கையோ, பேட்டிங்கையோ தேர்வு செய்யும், இங்கிலாந்தில் ஆஷஸ் தொடர் என்றால் ஆஸ்திரேலியா கேப்டனே முதலில் பேட்டிங்கா பீல்டிங்கா என்பதை முடிவெடுப்பார்.

ஐசிசி கிரிக்கெட் கமிட்டி இதனை விவாதிக்கத் தொடங்கிவிட்டது. இந்த யோசனையை பரிந்துரை செய்தவர் டேரன் லீ மேன். டாஸ் முறையை ஒழித்து விட்டால் எந்த கிரிக்கெட் வாரியமும் டீசண்ட்டான பிட்ச்களைப் போட்டாக வேண்டும். டாஸின் மூலம் பெறும் அனுகூலம் அநியாயமாக உள்ளதாக டேரன் லீ மேன் ஏற்கெனவே புலம்பியுள்ளார்.

இந்த யோசனைக்கு ரிக்கி பாண்டிங், மைக்கேல் ஹோல்டிங், போத்தம், ஷேன் வார்ன் ஆகியோரும் ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிகிறது.

Mohamed:
whatsapp
line