உலக கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி துவக்க வீரர் ஷான் மார்ஷ் தற்போது விலகியுள்ளார். இவர் குணமடைய மூன்று வாரங்கள் தேவைப்படும் என்பதால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் முதலாவது அணியாக ஆஸ்திரேலியா அரையிறுதிக்குள் நுழைந்தது. அடுத்ததாக, இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தனர். நியூசிலாந்து அணி அரையிறுதியில் விளிம்பில் உள்ளது பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டியின் முடிவை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
ரவுண்ட் ராபின் லீக் சுற்றின் கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கு முன்னர் பயிற்சியில் ஈடுபட்டு வந்த அணியின் அதிரடி துவக்க வீரர் சான் மார்ஷ் முன்னங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு இவர் குணமுடைய குறைந்தது மூன்று வாரங்கள் தேவைப்படும் என்பதால் தற்போது உலக கோப்பை அணியில் இருந்து விளக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக இந்தியா அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடிய பீட்டர் ஹண்ட்ஸ்க்கோம் ஆஸ்திரேலிய உலகக்கோப்பை அணியில் இணைய உள்ளார்.
உலகக் கோப்பை தொடருக்கு முன்னமே முழு உடல் தகுதி பெறாமல் இருந்த ஷான் மார்ஷ், இத்தொடரில் இரண்டு போட்டிகளில் மட்டுமே களமிறங்கி 26 ரன்கள் எடுத்து இருந்தார். அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் அபார துவக்கம் கொடுத்து வருவதால், இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல் போனது. தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக குணமடைந்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இறுதி லீக் போட்டியில் தென்னாபிரிக்கா அணியை நாளை (ஜூலை 6) மான்செஸ்டரில் எதிர்கொள்கிறது.