ஐ.சி.சி விருதுகள் : 2017ன் சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி
ஒட்டுமொத்தமாக இந்த வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதினை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தட்டிச்சென்றார். சென்ற வருடம் (2016) இந்த விருதினை இன்னொரு இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தட்டிச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற வருடத்தில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவருடைய சிறந்த செயல்பாடு காரணமாக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 2026 செப்டம்பர் முதல் 2017 இறுதி வரை எடுத்துக்கொள்ளப்பட்ட கால இடைவெளியில் விராட் கோலி அசத்தியுள்ளார். இந்த காலகட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் மொத்தம் 77.80 சராசரியில் 2203 ரன்களை குவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 82.63 சராசரியில் 1818 ரன்களை குவித்துள்ளார். இதில் 7 சதங்கள் அடங்கும். மேலும், டி20 போட்டிகளில் 153 ஸ்ரைக் ரேட்டில் 299 ரன்களை குவித்துள்ளார். இதேபோன்று கடந்த 2012ஆம் ஆண்டு ஐ.சி.சியின் சிறந்த ஒருநாள் வீரருக்காக விருதினையும், சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதினைரும் தட்டி சென்றார் விராட் கோலி.
சென்ற வரடம் இந்த விருதினை இந்திய வீரர் ரவிசந்திரன் அஸ்வின் பெற்றார். மேலும், இது குறித்து விராட் கோலி கூறியதாவது,
இந்த விருதினை இரண்டாவது முறையாக பெறுவது எனக்கு மகிழ்ச்சியாகி உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு இந்த விருதினை பெற்றறேன். மேலும் அடுத்தடுத்து இரண்டு முறை இந்தியர்கள் இந்த விருதினை பெறுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
எனக் கூறினார் விராட் கோலி.