கிரிக்கெட்டில் புதிய முறையை அமல்படுத்துகிறது ஐ.சி.சி !!

கிரிக்கெட்டில் புதிய முறையை அமல்படுத்துகிறது ஐ.சி.சி

டி20, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அணிகள் தங்கள் ஓவர்களை முடிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதால் போட்டி நீண்ட நேரம் சென்று பார்வையாளர்களுக்கு சோர்வை ஏற்படுத்தி வருகிறது.

பேட்ஸ்மெனின் ரிதமும், எண்ண ஓட்டமும் இதனால் தடைபடுகிறது, உதாரணமாக நெருக்கடியான கட்டங்களில் பேட்ஸ்மென்கள் கிரீசில் பந்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் போது நடுவரும் பந்தை வீசலாம் என்று தயாராக இருக்கும் போது பீல்டிங் அணி களவியூகம் அமைக்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு அனைவரையும் வெறுப்பேற்றுகிறது.

இதனால் கிரிக்கெட் ஆட்டத்தின் விறுவிறுப்பு குறைந்து பார்வையாளர்களின் சுவாரஸ்யமும் குன்றுவதோடு, போட்டிகள் முடிய கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதற்காகத்தான் அபராத முறை, தகுதியிழப்புப் புள்ளிகள் ஆகிய முறை கொண்டு வரப்பட்டது, ஆனால் தற்போது மாறாக கேப்டனை ஒரு போட்டியில் அல்லது 4 போட்டிகளில் உட்கார வைப்பது என்ற விதிமுறை போய் அணி மொத்தத்திற்கும் அபராதம் விதிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐசிசி பொதுமேலாளர் ஜெஃப் அலார்டீஸ் இது தொடர்பாக கூறும்போது, டி 20, குறைந்த ஓவர் போட்டிகளில் ஸ்டாப் கிளாக் முறை கொண்டு வரப்போகிறோம் என்றார்.

அதாவது, “டி20 போட்டி தொடங்கும் முன்பாக 85 நிமிடங்கள் என்று கெடிகாரம் காட்டும் முதல் ஓவரிலிருந்து அது தொடங்கி பிறகு அது குறைந்து கொண்டே வந்து ஜீரோவில் நிற்கும். நோக்கம் என்னவெனில் வீரர்கள், பார்வையாளர்கள் நடுவர்கள் ஆகியோருக்கும் தெரிய வேண்டும். கெடிகாரம் ஜீரோ என்று காட்டும் போது பவுலிங் அணி தன் கடைசி ஓவரை வீச தொடங்கியிருக்க வேண்டும்.

ஆனால் அதே வேளையில் டி.ஆர்.எஸ். முறையீடு, வீரர்கள் காயம் ஆகியவற்றினால் இடையூறு ஏற்பட்டால் வீணாகும் கால அளவை நடுவர் கெடிகார பொத்தானை அழுத்தி மீண்டும் கூட்டுவார்” இவ்வாறு கூறினார்.

 

Mohamed:

This website uses cookies.