இலங்கையை 3-0 என வென்றதன் மூலம் டி20 கிரிக்கெட் போட்டிக்கான ஐ.சி.சி. அணிகள் தரவரிசையில் இந்தியா 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
20 ஓவர் போட்டி தரவரிசை: இந்தியா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
இலங்கை அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடர் தொடங்குவதற்கு முன்பாக 20 ஓவர் உலத்தர வரிசையில் இந்தியா 119 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருந்தது.
3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தி உள்ளது. இதன் மூலம் தர வரிசை பட்டியலில் 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
121 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்து உள்ளது. 124 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் (120) 3-வது இடத்திலும், நியூசிலாந்து (120) 4-வது இடத்திலும், இங்கிலாந்து (119) 5-வது இடத்திலும் உள்ளன.
டி20 அணிகளின் தரவரிசை பட்டியல்
- பாகிஸ்தான்
- இந்தியா
- வெஸ்ட் இண்டீஸ்
- நியூசிலாந்து
- இங்கிலாந்து
- தென்னாப்பிரிக்கா
- ஆஸ்திரேலியா
- இலங்கை
- ஆப்கானிஸ்தான்
- வங்கதேசம்
டி20 பேட்ஸ்மேன் தர வரிசை பட்டியல்
- ஆரோன் பின்ச் (ஆஸி)
- எவின் லெவிஸ் (மே.இ.தீ)
- விராட் கோலி (இந்தியா)
- லோகேஷ் ராகுல் (இந்தியா)
- கேன் வில்லியம்சன் (நியூஸி)
- க்ளென் மேக்ஸ்வெல் (ஆஸி)
- அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து)
- ஜோ ரூட் ( இங்கிலாந்து)
- ஹாஷிம் அம்லா ( தென்.)
- மார்ட்டின் கப்டில் (நியூஸி)
டி20 பந்து வீச்சாளர் தர வரிசைபட்டியல்
- இமாட் வாசிம் (பாக்)
- ரசிட் கான் (ஆப்கன்)
- ஜஸ்ப்பிரிட் பும்ரா (இந்தியா)
- சாமியுல் பத்ரி ( மே.இ.தீ)
- இம்ரான் தாகிர் (தென்)
- சுனில் நரைன் (மே.இ.தீ)
- முஸ்டபிசுர் ரஹ்மான் (வங்க.தே)
- ஜேம்ஸ் பாக்னர் (ஆஸி)
- ஷகிப் அல் ஹசன் ( வங்க. தே)
- இஷ் சோதி (நியூஸி)
டி20 ஆல் ரவுண்டர் தர வரிசைப்பட்டியல்
- ஷகிப் அல் ஹசன் (வங்க. தே)
- க்ளென் மேக்ஸ்வெல் (ஆஸி)
- முகமது நபி (ஆப்கன்)
- மரலோன் சாமியுல்ஸ் (மே.இ.தீ)
- ஜே.பி டுமினி (தென்)
- பீட்டர் போரென் (நெதர்லாந்து)
- மகமத்துல்லா (வங்க.தே)
- பால் ஸ்டெர்லிங் (அயர்லாந்து)
- சோயப் மாலிக் (பாக்)
- சாமியல்லா சென்வாரி (ஆப்கன்