50 ஓவர் உலகக்கோப்பைத்தொடருக்கு புதிய வகை சூப்பர் லீக்கை அறிமுகம் செய்து வைத்த ஐசிசி! முதல் தொடர் அமோகம்!

உலகக் கோப்பை சூப்பர் லீக்கை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

ஜூலை 30 முதல் இங்கிலாந்து – அயர்லாந்து அணிகளுக்கிடையே இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடர், சூப்பர் லீக்கின் முதல் தொடராக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் 2023-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

2023-ல் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டிக்கான தகுதிச் சுற்றாக இது கருதப்படும்.

உலகக் கோப்பை சூப்பர் லீக்கில் 12 முழு உறுப்பினர்களும் நெதர்லாந்தும் பங்கேற்கின்றன.

அனைத்து அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட நான்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும்.

இதில் முதல் ஏழு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2023 உலகக் கோப்பைப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும். போட்டியை நடத்தும் நாடு என்பதால் இந்தியா, தானாகத் தகுதியடைந்துள்ளது. ஆக, 8 அணிகள் இதிலிருந்து தேர்வாகிவிடும்.

நேரடியாகத் தகுதி பெறாத அணிகள், 5 அசோசியேட் அணிகளுடன் இணைந்து தகுதிச்சுற்றுப் போட்டியில் பங்கேற்கும். இதிலிருந்து 2 அணிகள் தேர்வாகும்.

ஐசிசியில் முழு உறுப்பினராக இருக்கும் 12 அணிகளில் 8 அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுவிடும். மீதமுள்ள 4 அணிகள் அதாவது மே.இ.தீவுகள், ஆப்கானிஸ்தான், ஓமன், அயர்லாந்து ஆகியவை மற்றும் 2015-17 உலகக் கிரிக்கெட் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்ற நெதர்லாந்து ஆகிய 5 அணிகளுக்கும் இடையே தகுதிச்சுற்று நடத்தப்பட்டு அதில் முதல் இரு இடங்களைப்பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை சூப்பர் லீக்கில் தகுதி பெறும்.

2023 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன.

Mohamed:

This website uses cookies.