இனி ஒருத்தனையும் சும்மா விட கூடாது; விதிகளை கடுமையாக்குகிறது ஐ.சி.சி !!

இனி ஒருத்தனையும் சும்மா விட கூடாது; விதிகளை கடுமையாக்குகிறது ஐ.சி.சி

பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் சிக்கும் கிரிக்கெட் வீரர்கள் மீதான தண்டனையை மிக கடுமையாக்குவது குறித்து ஐ.சி.சி.,  ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீப காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்தும் நிகழ்வு அதிகமாகி வருகிறது. கடந்த மார்ச் மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் ஆஸ்திரேலிய துவக்க வீரர் பேன்கிராப்ட், பந்தை சேதப்படுத்தினார். இது கேமராவில் பதிவானது. இதற்காக பேன்கிராப்டுக்கு, சம்பளத்தில் இருந்து 75 சதவீதம் அபராதமாக ஐ.சி.சி, விதித்தது.

கேப்டன் ஸ்மித் ‘லீட்ர்ஷிப் குழு’வுக்கு தெரிந்தே இந்த செயல் நடந்ததாக ஒப்புக்கொண்டார். இந்த விவகாரத்தில் ஐசிசி வழங்கிய தண்டனை போதாது என ஆஸ்திரேலியாவில் பலர் கோரிக்கை வைக்க, விசாரணை நடத்திய கிரிக்கெட் ஆஸ்திரேலிய குழு, பந்தை சேதப்படுத்த திட்டம் போட்டுக்கொடுத்த ஸ்மித், வார்னருக்கு ஒரு ஆண்டு தடைவிதித்தது. பேன்கிராப்ட்டுக்கு 9 மாதம் தடைவிதித்தது.

இந்நிலையில் விண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளின் துவக்கத்தின் போது, இரண்டாவது விளையாடிய பந்து அதிகம் சேதமடைந்திருப்பதாக தெரிவித்தனர். ஆனால், பந்தை ஆய்வு செய்த அம்பயர்கள் பந்து மாற்றத்துக்கான அவசியம் இல்லை என தெரிவித்தனர்.

ஆனால் இதை ஏற்க மறுத்த இலங்கை வீரர்கள் மைதானத்தில் இறங்க மறுத்தனர். பின் சுமார் 90 நிமிட பேச்சு வார்த்தைக்கு பின், அம்பயர்கள் பந்தை மாற்ற ஒப்புக்கொண்ட பின்பே இலங்கை வீரர்கள் களமிறங்கினர். இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்திமால் பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்த வீடியோ மற்றும் இதர பிற ஆதரங்களையும் வைத்து ஐ.சி.சி., நடத்திய முதற்கட்ட விசாரணையில் சந்திமால் பந்தின் தன்மையை மாற்றியது உறுதியாகியுள்ளது. விரைவில் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.

இந்நிலையில் பந்தை சேதப்படுத்தும் விவகாரத்துக்கு கடுமையான தண்டனை வழங்க, இம்மாதத்தின் கடைசியில் நடக்கவுள்ள கூட்டத்தில் விவாதிக்க ஐசிசி., திட்டமிட்டுள்ளது. இக்கூட்டத்தில் இந்த பிரச்சனையை மூன்றாவது லெவல் குற்றங்களில் சேர்க்க ஐசிசி., முடிவு எடுக்கும் என்றும் தெரிகிறது.

Mohamed:

This website uses cookies.