இந்த வருடம் டி.20 உலகக்கோப்பை கிடையாது; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஐ.சி.சி !!

இந்த வருடம் டி.20 உலகக்கோப்பை கிடையாது; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஐ.சி.சி

கொரோனா வைரஸ் காரணமாக இந்த வருடம் நடக்கவிருந்த டி.20 உலகக்கோப்பை 2021ம் ஆண்டிற்கு தள்ளி வைக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி., அதிகாரப்பூர்வை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டி.20 உலகக்கோப்பையை அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் வைத்து நடத்த ஐ.சி.சி., திட்டமிட்டிருந்தது. கொரோனாவின் கோரதாண்டவம் இன்னும் முடியாமல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் இந்த வருடம் டி.20 உலகக்க்கோப்பையை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

டி.20 உலகக்கோப்பையை தள்ளி வைத்தாலோ அல்லது ரத்து செய்தாலோ மிகப்பெரும் இழப்பு ஏற்படும் என்பதால் ஐ.சி.சியும் இறுதி முடிவு எடுக்க முடியாமல் திணறி வந்தது.

டி.20 உலகக்கோப்பை குறித்தான ஆலோசனை கூட்டம் ஏற்கனவே இரண்டு முறை நடைபெற்று அதில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், மீண்டும் ஒருமுறை ஐ.சி.சி., கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் முடிவில் இந்த வருடம் நடைபெற இருந்த டி.20 உலகக்கோப்பை ரத்து செய்யப்படுவதாக ஐ.சி.சி., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த வருடம் நடைபெற இருந்த டி.20 உலகக்கோப்பையானது 2021ம் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்படுவாதகவும் ஐ.சி.சி அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 2021ம் ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதம் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி நவம்பர் 14-ல் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் 2022-ம் ஆண்டு டி20 உலக கோப்பை அக்டோபர் – நவம்பரில் நடைபெறும் எனவும், இறுதிப் போட்டி நவம்பர் 13-ந்தேதி நடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் 2023 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை இந்தியாவில் அக்டோபர் – நவம்பரில் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி நவம்பர் 26-ந்தேதி நடைபெறும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

டி.20 உலகக்கோப்பை தற்பொழுது ரத்து செய்யப்பட்டு விட்டதால் ஐ.பி.எல் தொடர் நடத்துவதற்கான ரூட் கிளியராகி விட்டதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஐ.பி.எல் எப்போது துவங்கும் என்பது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Mohamed:

This website uses cookies.