எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.
டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் துவங்க உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இந்த தொடரின் முதல் போட்டி அக்டோபர் 16ம் தேதி நடைபெற உள்ளது.
டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தங்களது அணிகளை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்திய போன்ற முக்கிய அணிகள் ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், நியூசிலாந்து அணி அக்டோபர் 7ஆம் தேதி நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முத்தொடர் போட்டிக்கும் உலகக்கோப்பை தொடருக்குமான தன்னுடைய அணியை அறிவித்துள்ளது.
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் முதன்முதலாக பின் ஆலென் மற்றும் மைக்கல் பிரேஸ்வெல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து கடந்த உலக கோப்பை தொடரில் காயம் காரணமாக விளையாடாமல் போன வேகப்பந்துவீச்சாளர் ஆடம் மில்னே இந்த முறை இடம்பெற்றுள்ளார்.
அதேபோன்று நட்சத்திர ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசன் முதுகு தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த உலகக்கோப்பை தொடரில் இடம் பெறவில்லை என்பது அந்த அணியின் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. மேலும் டிம் சைபர்ட்,டோட் அஸ்டில் போன்ற வீரர்கள் மோசமான பார்ம் காரணமாக அணியில இடம் பெறவில்லை
இவர்களை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களுமே டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியின் ரெகுலர் வீரர்களே இடம்பெற்றுள்ளனர்.
கடந்த 2021 உலகக் கோப்பை தொடரில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய நியூசிலாந்து அணி, இறுதிசுற்றில் ஆஸ்திரேலியா அணியுடன் தோல்வியை தழுவியது ஆனால் இந்த முறை அது போன்று நடக்காமல் இருக்க தரமான அணியை தேர்ந்தெடுத்துள்ளது.
முத்தொடர் மற்றும் உலகக் கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி..
கேன் வில்லியம்சன் (c), பின் ஆலென், ட்ரெண்ட் போல்ட், மைக்கல் பிரேஸ்வெல்,மார்க் சாப்மேன்,டிவான் கான்வே,லக்கி பெர்குசன்,மார்டின் கப்தில், ஆடம் மில்னே, டேரில் மிட்சல்,ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்சல் சார்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி.