பெரிய திறமைசாலி… ஆனா வாய்ப்பே கொடுக்காம திறமையை வீணடிக்கிறீங்களே; இளம் வீரருக்கு முன்னாள் வீரர் ஆதரவு !!

டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் உம்ரான் மாலிக்கிற்கும் இடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரான டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் துவங்குகிறது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ம் தேதி துவங்கும் இந்த தொடர் நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.

டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்கான இந்திய அணியில் வழக்கமான அனைத்து வீரர்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அர்ஸ்தீப் சிங் போன்ற இளம் வீரர்களுக்கும் இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த டி.20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறியதாலும், சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியதால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அதே போல் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்தான தங்களது கருத்துக்களையும் முன்னாள் வீரர்கள் பலர் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரரான டேனிஷ் கனேரியா, உம்ரான் மாலிக்கிற்கு இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து டேனிஷ் கனேரியா பேசுகையில், “உம்ரான் மாலிக்கிற்கு இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். போதிய வாய்ப்புகள் கொடுத்து உம்ரன் மாலிக்கையும் இந்திய அணி பரிசோத்து பார்த்திருக்க வேண்டும். டி.20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் உம்ரன் மாலிக்கை போன்று அசுரவேகத்தில் பந்துவீசக்கூடியவர் கண்டிப்பாக தேவை. பும்ராஹ்வும் தற்போது தான் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளதால் அவர் தனது பழைய ஆட்டத்திற்கு திரும்புவதற்கு சில நாட்கள் ஆகலாம், எனவே உம்ரன் மாலிக்கை எடுத்திருந்தால் இந்திய அணிக்கு கூடுதல் பலம் கிடைத்திருக்கும். ஆசிய கோப்பை தொடரிலேயே ஆவேஸ் கானிற்கு பதிலாக உம்ரன் மாலிக்கிற்கு இடம் கொடுத்து அவரை முழுமையாக பரிசோதித்து பார்த்திருக்க வேண்டும். ஆசிய கோப்பை தொடரில் உம்ரன் மாலிக்கிற்கு இடம் கொடுத்திருந்தால் இந்திய அணிக்கும் ஒரு தெளிவான முடிவு கிடைத்திருக்கும், ஆனால் இந்திய அணி அதை செய்ய தவறிவிட்டது” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.