2019-20 ஆம் ஆண்டுக்கான ஐசிசி கள நடுவர் பட்டியலை இன்று வெளியிட்டது அதில் இந்திய நடுவர் ஒருவர் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் நடுவர் பணியை மேற்கொண்ட இயான் கெளட் அத்துடன் ஓய்வு பெற்றார். இதனால் இவரையும், எந்தவொரு அறிவிப்பும் இன்றி இந்தியாவை சேர்ந்த நடுவரான ரவி சுந்தரம் இருவரையும் ஐசிசி இன் நடுவர்கள் குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 2019-20 ஆம் ஆண்டுகளின் போட்டிகளுக்கு மைக்கேல் கெளப், ஜோயல் வில்சன் ஆகிய இருவரும் சிறப்பு நடுவர்கள் குழுவில் புதிதாக இணைந்துள்ளனர்.
மைக்கேல் கௌப் இதுவரை 59 ஒருநாள் போட்டிகள், 9 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 14 டி20 போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார். அதேபோல, ஜோயல் வில்சன் 13 டெஸ்ட் போட்டிகள், 63 ஒருநாள் போட்டிகள், 26 டி20 போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ளார்.
இந்த இரு சிறப்பு நடுவர்களை சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ரஞ்சன் மடுகல்லே, டேவிட் பூன், ஐசிசி பொதுமேலாளர் ஜெஃப் ஆலர்டைஸ் ஆகியோர் உள்ளடக்கிய குழு தேர்வு செய்தது.
உலக கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக, தவறுதலாக 6 ரன்கள் கொடுத்த இலங்கையைச் சேர்ந்த குமார் தர்மசேனா எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து சிறப்பு நடுவர் குழுவில் நீடிக்கிறார்.
ஐசிசி சிறப்பு நடுவர்கள் (ஏற்கனவே):
ஆலீம் தர், குமார் தர்மசேனா, மரையஸ் எராஸ்மஸ், கிறிஸ் ஜஃப்பனி, ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்ச்ரட் கெட்டில்பிரோ, நைஜல் லாங், புரூஸ் ஆக்ஸ்போர்ட், பால் ரீபில், ராட் டக்கர்.
ஐசிசி ஆட்ட நடுவர்கள்:
டேவிட் பூன், கிறிஸ் பிராட், ஜெப் குரோவ், ரஞ்சன் மடுகல்லே, ஆன்டி பைகிராப்ட், ரிச்சி ரிச்சர்ட்ஸன், ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் உள்ளனர்.