ஒருவழியாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடக்க இருந்த டி20 உலக கோப்பை தொடரை ஒத்திவைத்துள்ளது ஐசிசி நிர்வாகம். கடந்த இரண்டு மாதங்களாக யோசித்து ஐசிஐசி தற்போது செயல்பட்டுள்ளது. இதன் காரணமாக பிசிசிஐ அந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்த தயாராகி உள்ளது . தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு இதற்கு மேலும் ஒரு பிரச்சினை உருவாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி டி20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கவிருந்த சர்வதேச டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை, அதே ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை எந்த நாட்டில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், 2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இந்தியாவில் நடத்தப்படும் என்றும், அந்தத் தொடர் நவம்பர் 26ல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக உலகக் கோப்பை தொடர் மார்ச் மாதத்தில் நடத்தப்படும் நிலையில், 2023ல் அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
அப்படி அடுத்த வருடம் நடைபெற்றால் 2022ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரை எப்போது நடத்துவது இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேலும் 2023 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை தொடரும் இந்தியாவில்தான் நடைபெற இருக்கிறது. 2022ஆம் ஆண்டு அப்படி டி20 உலக கோப்பை தொடர் நடக்கவில்லை என்றால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நஷ்டம் தான்.
இதன் காரணமாக அந்த நேரத்தை எடுத்துக் கொள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் இந்திய கிரிக்கெட் வாரியம் சண்டைக்குச் செல்லும் என்பதையும் மறந்து விட முடியாது. இதன் காரணமாக ஐசிசி ஒரே ஒரு உலக கோப்பை தொடரை மற்றும் தள்ளிவைத்துவிட்டு இரண்டு கிரிக்கெட் வாரியங்களும் சிண்டு முடித்து வைத்து உள்ளதாகவே ரசிகர்கள் கருதுகிறார்கள் .பொறுத்திருந்து பார்ப்போம் ஐசிசி என்ன செய்கிறது என்று.