ஒரு நாள் தொடருக்கான சிறந்த பேட்ஸ்மேன் என்ற ஐசிசி தரவரிசை பட்டியலில் முன்னேற்றமடைந்த சஞ்சு சாம்சன், சுப்மன் கில் ; எத்தனாவது இடம் தெரியுமா !!

ஒரு நாள் தொடருக்கான சிறந்த பேட்ஸ்மேன் என்ற ஐசிசி தரவரிசை பட்டியலில் முன்னேற்றமடைந்த சஞ்சு சாம்சன், சுப்மன் கில் ; எத்தனாவது இடம் தெரியுமா…

ஒரு நாள் தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஐசிசி தரவரிசை பட்டியலில் சுப்மன் கில், சஞ்சு சாம்சன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற பல சீனியர் வீரர்களுக்கு நியூசிலாந்து அணியுடனான இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டதால், இளம் வீரர்கள் பலருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்தது. தங்களது திறமையை வெளிப்படுத்தி கொள்ள இளம் வீரர்களுக்கு இந்த தொடர் நல்ல வாய்ப்பாகவே கருதப்பட்டது, ஆனால் டி.20 தொடரில் சூர்யகுமார் யாதவையும், ஒருநாள் தொடரில் சுப்மன் கில்லையும் தவிர மற்றவர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இந்த தொடரில் செயல்படவில்லை. இதன் காரணமாக இந்திய அணி ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் இழந்தது.

இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் ஒருநாள் தொடருக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இதில் மழையால் தடைபட்ட போட்டிகள் உட்பட 3 போட்டிகளிலுமே பங்கேற்ற இந்திய அணியின் இளம் துவக்க வீரர் சுப்மன் கில்,109 ரன்கள் எடுத்ததன் மூலம் 3 இடங்கள் முன்னேறி 34வது இடத்தில் உள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் இந்த தொடரில் 129 ரன்கள் அடித்ததன் மூலம் ஆறு இடங்கள் முன்னேறி 27வது இடத்தை பிடித்துள்ளார்.

இதில் ஒரே ஒரு போட்டியில் பங்கேற்ற சஞ்சு சாம்சன்38 பந்துகளில் 36 ரன்கள் எடுத்ததன் மூலம் பத்து இடங்கள் முன்னேறி 82வது இடத்தில் இடம் பெற்றுள்ளார் இவர்களை தவிர்த்து வழக்கம்போல் பாபர் ஒருநாள் தொடருக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.மேலும் இந்திய அணிகள் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் 8 மற்றும் 9வது இடங்களை முறையே பிடித்துள்ளனர்.

பந்துவீச்சாளர் வரிசையை பொருத்தமட்டில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் (760), ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான ஹசல்வுட்(727) மற்றும் மிட்சல் ஸ்டார்க்(665) முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர் என்பது

Mohamed:

This website uses cookies.