தனது இடத்தை கெட்டியாக பிடித்து கொண்ட விராட் கோலி… புதிய தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது !!

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான பிசிசிஐ., வெளியிட்டுள்ளது.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் இலங்கை அணியை வீழ்த்திய வங்கதேசம் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது.

இந்தநிலையில், இந்த தொடருக்கான பிறகான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி., இன்று வெளியிட்டுள்ளது.

ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். அதே போல் ஹிட்மேன் ரோஹித் சர்மா 3வது இடத்தில் நீடிக்கிறார். சமீபகாலமாக தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார்.

அதே போல் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் ஜஸ்ப்ரிட் பும்ராஹ் 5வது இடத்தில் நீடிக்கிறார். வங்கதேச தொடரில் மிக சிறப்பாக செயல்பட்ட இலங்கை அணியின் துஸ்மந்தா சமீரா மற்றும் இலங்கை கேப்டன் குஷால் பெரேரா ஆகியோர் புள்ளி பட்டியலில் ஜெட் வேகத்தில் முன்னேறியுள்ளனர்.

Mohamed:

This website uses cookies.