புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது ஐ.சி.சி; இந்திய வீரர்களின் நிலை என்ன தெரியுமா..?
சர்வதேச போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி., நேற்று வெளியிட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி., நேற்று அணிகள் மற்றும் வீரர்களுக்கான புதிய தரவரிசையை வெளியிட்டது. சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலிடம் வகிக்கிறார். அதே போல் துணை கேப்டன் ரோகித் சர்மா 2-வது இடத்தில் நீடிக்கிறார். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட் முதல் இடத்தையும், இந்தியாவின் ஜஸ்ப்ரிட் பும்ராஹ் 2-வது இடத்திலும் உள்ளனர்.
இதே போல் டி.20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதல் இடத்தையும், இந்தியாவின் கேஎல் ராகுல் 2-வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்தை பிடித்துள்ளார். பந்துவீச்சாளர்களில் ஆஃப்கானிஸ்தான் அணியின் ரசீத் கான் முதலிடத்தில் உள்ளார்.
டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில், பேட்ஸ்மேன் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் முதல் இடத்திலும், விராட் கோஹ்லி 2-வது இடத்திலும், மற்றொரு ஆஸ்திரேலிய வீரர்கள் மார்னஸ் லாபஸ்சேனே 3-வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சாளர்களில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார்.
அணிகளுக்கான தரவரிசையில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிக்கான தரவரிசையில் 3-வது இடத்திலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2-வது இடத்திலும் உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஏழு விக்கெட் வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சு தரவரிசையில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.