முதல் டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவால் ஆட முடியுமா ! கைவிட்ட பிசிசிஐ ! என்ன சொல்கிறது ஐசிசி விதிகள் ?

முதல் டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவால் ஆட முடியுமா ! கைவிட்ட பிசிசிஐ ! என்ன சொல்கிறது ஐசிசி விதிகள் ?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நடந்து முடித்து விட்டது. இதில் ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியும் டி20 தொடரில் இந்திய அணியும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி விட்டனர். மொத்தமாக எடுத்து பார்த்தால் 6 போட்டிகளில் மூன்று போட்டிகளில் இந்திய அணியும் மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து டெஸ்ட் தொடர் வரும் 17ஆம் தேதி தொடங்க போகிறது. அதிலும் இந்த முதல் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக திட்டமிடப்பட்டிருக்கிறது. இங்குதான் பிரச்சனை உருவாகியிருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின்போது ரவீந்திர ஜடேஜாவுக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது.

எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து ஜடேஜாவின் தலையில் பலமாக தாக்கியது உடனடியாக அவருக்கு கன்கஸன்  மாற்று வீரர் என்ற முறையில் ரவிந்திர ஜடேஜாவிற்கு பதில் யுஸ்வேந்திர சாஹல் களம் இறக்கப்பட்டார்.

மேலும் இவரது அபாரமான பந்து வீச்சு காரணமாக இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றது. இந்நிலையில் வரும் 17ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் போட்டி தொடங்க போகிறது.

இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா விளையாடுவது சந்தேகமாக இருக்கிறது. இந்த போட்டியில் விளையாடுவதற்கு பகலிரவு டெஸ்ட் போட்டியாக அமைந்திருந்தாலும் காலில் ஏற்பட்ட காயம் மற்றும் தொடைப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு எவராலும் முடியாது.

மேலும் மூன்று வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என்று பிசிசிஐ மருத்துவ குழு தெரிவித்து விட்டது. அதேநேரத்தில் ஐசிசி விதிகளின்படி ஒரு வீரருக்கு காலில் எந்த விதமான காயம் ஏற்பட்டாலும் அந்த வீரர் குறைந்தது 7 முதல் 10 நாட்களுக்கு தனியாக ஓய்வில் இருக்க வேண்டும்.

அது மட்டுமல்லாமல் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் என்றால் அதற்கு முன்னர் ஒரு பயிற்சிப் போட்டியில் ஆடியிருக்க வேண்டும். ரவீந்திர ஜடேஜா இருக்கும் நிலையில் பயிற்சி போட்டியில் கண்டிப்பாக ஆட முடியாது. மேலும் தற்போது அவருக்கு இருக்கும் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் இன்னும் சரியாகவில்லை.

இதன் காரணமாக பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஒரு வீரரை நேரடியாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட வைக்க விதிமுறையில் இடமில்லை இப்படி பார்த்தால் ரவீந்தர் ஜடேஜா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை. சொல்லப்போனால் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரை அவரால் முடியாது என்பதே உண்மை.

Prabhu Soundar:

This website uses cookies.