கடந்த 10 ஆண்டுக்கான சிறந்த டி.20 அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி தேர்வு செய்து அறிவித்துள்ளது.
கடந்த பத்தாண்டில் சிறப்பாக ஆடிய டி.20 வீரர்கள் 11 பேரை தேர்வு செய்து, பத்தாண்டின் சிறந்த லெவனை அறிவித்துள்ளது ஐசிசி. ஐசிசி தேர்வு செய்துள்ள சிறந்த அணியின் கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார், மேலும் தோனியையே விக்கெட் கீப்பராகவும் தேர்ந்தெடுத்துள்ளது ஐசிசி.
இதே போல் துவக்க வீரர்களாக டி.20 தொடரின் ஜாம்பவானான கிரிஸ் கெய்லை தேர்வு செய்துள்ள ஐசிசி, மற்றொரு துவக்க வீரராக இந்திய அணியின் ரோஹித் சர்மாவை தேர்வு செய்துள்ளது. மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பின்ச்சையும், நான்காவது வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியையும் ஐசிசி தேர்வு செய்துள்ளது. ஐந்தாவது இடத்தில் டிவில்லியர்ஸின் பெயர் இடம்பெற்றுள்ளது.
ஆல் ரவுண்டர்கள் வரிசையில், கிளன் மேக்ஸ்வெல் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணியின் ரசீத் கான், மற்றும் விண்டீஸ் அணியின் கீரன் பொலார்ட் ஆகியோரை தேர்வு செய்துள்ள ஐசிசி பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஜஸ்ப்ரிட் பும்ராஹ் மற்றும் லசீத் மலிங்காவை தேர்வு செய்துள்ளது.
ஐசிசி தேர்வு செய்துள்ள சிறந்த டி.20 அணி;
ரோஹித் சர்மா, கிரிஸ் கெய்ல், ஆரோன் பின்ச், விராட் கோலி, ஏ.பி டிவில்லியர்ஸ், கிளன் மேக்ஸ்வெல், தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), கீரன் பொலார்ட், ரசீத் கான், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், லசீத் மலிங்கா.