முக்கியமான சீனியர் வீரருக்கே இடம் இல்லை…டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு !!

முக்கியமான சீனியர் வீரருக்கே இடம் இல்லை...டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு !! 4முக்கியமான சீனியர் வீரருக்கே இடம் இல்லை...டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு !! 4

எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் துவங்க உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இந்த தொடரின் முதல் போட்டி அக்டோபர் 16ம் தேதி நடைபெற உள்ளது.

முக்கியமான சீனியர் வீரருக்கே இடம் இல்லை...டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு !! 1முக்கியமான சீனியர் வீரருக்கே இடம் இல்லை...டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு !! 1

சர்வதேச டி.20 போட்டிகளுக்கான நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தனது அணியை முதல் ஆளாக அறிவித்திருந்த நிலையில், தற்போது இங்கிலாந்து அணியும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தனது அணியை அறிவித்துள்ளது.

ஜாஸ் பட்லர் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணியில் பில் சால்ட் என்னும் இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் சீனியர் வீரரான ஜேசன் ராய்க்கு இடம் கிடைக்கவில்லை. சர்வதேச போட்டிகள், உள்ளூர் போட்டிகள் என அனைத்திலும் சொதப்பி வருவதால் ஜேசன் ராய்க்கு பதிலாக பில் சால்டிற்கு இங்கிலாந்து அணி இடம் கொடுத்துள்ளது.

மொய்ன் அலி, பாரிஸ்டோ, சாம் கர்ரான், ஜோர்டன், லியம் லிவிங்ஸ்டன், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லே போன்ற சீனியர் வீரர்கள் அனைவரும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர்.

காயத்தால் அவதிப்பட்டு வரும் நட்சத்திர வீரரான தைமல் மில்ஸ் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். லியம் டேவ்சன் மற்றும் ரிச்சர்ட் கிளேசன் ஆகியோரும் ரிசர்வ் வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி;

ஜாஸ் பட்லர், மொய்ன் அலி, ஜானி பாரிஸ்டோ, ஹாரி ப்ரூக், சாம் கர்ரான், கிரிஸ் ஜோர்டன், லியம் லிவிங்ஸ்டன், டேவிட் மாலன், அடில் ரசீத், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லே, டேவிட் வில்லே, கிரிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

ரிசர்வ் வீரர்கள்;

தைமல் மில்ஸ், லியம் டேவ்சன், ரிச்சர்ட் கிளேசன்.

Mohamed:
whatsapp
line