இந்த உலக கோப்பை விராட் கோலிக்கு எப்படி இருக்கும் என்று கணித்துள்ளார் தென் ஆப்பிரிக்கா அணியின் ஜாம்பவான் ஜக்குவஸ் காலிஸ்.
உலக கோப்பை சென்றுள்ள இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இருப்பது பேட்டிங். துவக்க வீரர்கள் விரைவாக அவுட் ஆனால், மிடில் ஆர்டரில் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் அசத்தி வருகின்றனர். கீழ் வரிசையில் ஹர்திக் மற்றும் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை அளிக்கின்றனர்.
அனுபவமிக்க புவனேஸ்வரர் டெத் ஓவர்களில் ரன்களை வாரி கொடுக்கிறார். பும்ரா காயம் காரணமாக அணியில் இல்லை. மேலும் அர்சதிப் சிங் மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவரும் டெத் ஓவர்களை கவனித்துக் கொள்கின்றனர். ஹர்ஷல் பட்டேலின் சமீபத்திய ஃபார்ம் கவலைக்கிடமாக இருக்கிறது அதிக ரன்கள் விட்டுக் கொடுக்கிறார்.
இந்நிலையில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் விடுவதை பேட்டிங்கில் சரி செய்ய வேண்டும். சூரியகுமார் மற்றும் விராட் கோலி இருவரையும் முழுமையாக நம்பி இந்திய அணி இந்த உலக கோப்பையில் களமிறங்குகிறது. அவ்வப்போது கே எல் ராகுல், டாப் ஆர்டர் நம்பிக்கை அளிக்கிறார். இதற்கிடையில் இந்திய அணிக்கு யார் மிக முக்கிய வீரராகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராகவும் இருப்பார் என தனது கணிப்பில் தென்னாபிரிக்க அணியின் ஜாம்பவான் காலிஸ் தெரிவித்திருக்கிறார். அவரது கணிப்பில்,
“விராட் கோலி இந்திய அணிக்கு முதன்மையான வீரராக இருக்கிறார். கோலி சர்வதேச போட்டிகளில் நீண்ட காலம் விளையாடி வருகிறார். போதிய அளவிற்கு அனுபவம் கொண்டிருக்கிறார்.விளையாட்டில் ஏற்ற இறக்கம் வீரருக்கு இயல்பான ஒன்று. தற்போது மீண்டும் நல்ல பார்மிற்கு திரும்பி இருக்கிறார். குறிப்பாக உலகக்கோப்பை போன்று மிகப்பெரிய தொடர்களில் விராட் கோலி தாக்கம் அதிகமாக இருக்கும். எனது கணிப்பில் இம்முறை அவர் தான் அதிக ரன்களை குவித்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக இருப்பார். அவருக்கு பக்கபலமாக சூரியகுமார் யாதவ் இருப்பார் என நம்புகிறேன். இந்திய அணி பந்துவீச்சை சரி செய்து கொள்ள வேண்டும். இல்லை எனில் எவ்வளவு ரன்கள் அடித்தாலும் போதாது.” எனவும் தனது கணிப்பில் தெரிவித்தார்.